புதுடில்லி, பிப். 10 கருநாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதை இந்துத்துவா மாணவர்கள் தடுத்ததை அடுத்து அங்கு கடும் போராட்டம் வெடித்துள்ளது. நாளுக்கு நாள் போராட்டம் அதிகரிப்பதால் கரு நாடக அரசு மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரி களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. ஆயி னும் மாநிலம் முழுவதும் கடுமையான போராட் டத்தை மாணவ மாணவிகள் நடத்தி வருகின் றனர்.
இது குறித்து மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு வெங்க டேசன் மக்களவையில் உரையாற்ற கையில்,
“தமிழ்நாட்டில் ஜனவரி 15 ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியில் சிறார் நிகழ்சி ஒன்று ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சி பிரதமரின் மாண்பைக் குறைத்துவிட்டது என்று சொல்லி ஒன்றிய இணை அமைச்சர் அவரே முன்வந்து புகாரினை கேட்டு வாங்கி அமைச்சகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிலை யத்திற்கு தாக்கீது அனுப்புகிறார்.
தற்போது கருநாடகாவில் என்ன நடக் கிறது?
ஹிஜாப் அணிவதை முன் வைத்து நடை பெறும் வெறுப்பரசியல் மாணவ சமூகத்தி னையே கூறு போட்டுக் கொண்டிருக்கிறது. சம வய தினரான மாணவர்களோடு கலந்துரை யாடி, சமூக மயமாகும் தேவையிலிருக்கும் மாணவ சமூகத்தின் முன்னுரிமையை குலைத்துப் போடுகிறார்கள்
நீங்கள் சிறார்கள் தலையில் கிரீடம் அணிய வும் விடமாட்டீர்கள், அதைப் போல் மாண விகள் ஹிஜாப் அணிய வும் விடமாட்டீர்கள். உங்கள் உத்தரவுப்படி தான் பள்ளிக் குழந்தை கள் நாடகம் போடுவதும், கல்லூரி மாண வர்கள் ஆடை அணிவதும் நடக்க வேண்டுமா?
ஒரு துண்டு துணியை வைத்து எங்கள் கல்வி உரிமையைப் பறிக்காதீர்கள்” என்று முழங்கினாள் வீரப் பெண் முஸ்கான். மேலும் அவர். “சக மாணவர்களுக்குத் தண்டனை வேண்டாம், செய்தது தவறு என்று உணர்ந்தால் போதும்” என்று கூறியுள்ளார்.
அவரது வார்த்தை, எந்த மதவெறி யையும் மண்டியிடச்செய்யும் ஆற்றல் கொண்டது. இது ராமனின் வார்த்தை, நபிகளின் வார்த்தை, ஏசுவின் வார்த்தை, மனிதர்கள் கண்டறிந்த மகத்தான வார்த்தை. இந்த நேரத்தில் நாடெங் கும் எதிரொலிக்க வேண்டிய வார்த்தை”என்று பேசியுள்ளார்.
No comments:
Post a Comment