சென்னை, பிப். 6- நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவுகளுக்கு துணை நிற்போம் என முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத் துக்கட்சி கூட்டத்தில் பங் கேற்ற பல்வேறு கட்சிப் பிரமு கர்கள் தெரிவித்துள்ளனர்.
நீட்
விலக்கு சட்ட மசோ தாவை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து, முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தலை
மையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று (5.2.2022) நடந்தது.
கூட்டத்தில்
பங்கேற்ற பின்னர் கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
செல்வப்பெருந்தகை
(காங்கிரஸ்)
ஆளுநர்
சட்டமுன்வடிவை திருப்பி அனுப்பியதற்கு காங்கி ரஸ் சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளோம். ஆளுநர் திருப்பி அனுப்பியது அரசமைப்பு சட் டத்திற்கு எதிரானது. ஆளுந ரின் பணி சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள சட்டமுன் வடிவை குடியரசுத்தலைவருக்கு அனுப்புவது மட்டுமே. 142 நாள்கள் கிடப்பில் போட்டு திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர் கூறும் காரணம் வேறு. சட்டமன்றத்தில் இயற்றப் பட்ட தீர்மானம் வேறு. இது வரம்பு மீறிய செயல்.
வேல்முருகன்
(தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்):
நீட் தேர்வை
ரத்து செய்ய வேண்டும் என்ற சட்ட மசோ தாவை 142 நாட்கள் கழித்து ஆளுநர்
திருப்பி அனுப்பியதை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்காக மக்கள் திறள் போராட்
டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும் என்று முதலமைச் சரிடம் கோரிக்கை வைத்திருக்கி
றேன். அனைத்துக்கட்சி கூட் டத்தில் முடிவெடுத்ததன்படி ஏழை, எளிய மாணவர்களின்
நலன் கருதி தமிழ்நாடு அரசு சிறப்பு பேரவை கூட்டத்தொடரை உடனடியாக
கூட்டி மீண்டும் தமிழ்நாடு ஆளுநருக்கு சட்ட மசோதாவை அனுப்பி வைத்து அவர்
குடியரசு தலைவருக்கு அனுப்பி இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை
முதலமைச்சர் எடுத்திருக்கிறார். இதை முழு மனதாக ஆதரித்திருக்கிறோம்.
ஜவாஹிருல்லா
(மனித நேய மக்கள் கட்சி தலைவர்):
தமிழ்நாடு
மக்களின் விருப் பத்திற்கு மாறாக செயல்படும் ஆளுநர் திருப்பிப்போக வேண் டும் என்று மட்டும் இல்லாமல் ஆளுநர் என்ற பதவியை ஒழிப் பதற்கு முதலமைச்சர் ஒரு இயக் கத்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளோம்.
சிந்தனை
செல்வன் (விசிக):
சட்டமன்றத்தின்
இறையா மையை கேலி கூத்தாக்கியுள்ளது ஆளுநரின் நடவடிக்கை. மசோ தாவில் கூடுதல் விளக்கங்கள் தரப்பட வேண்டிய தேவை இல்லை எனக் கருதுகிறோம். அதிமுக இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளது பாஜவின் கருத்தியலை பின்பற்றி செல்கி றதோ என்ற அய்யம் ஏற்பட்டு உள்ளது. எனவே, அதிமுக நீட் விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சிறப்புக் கூட்டம் கூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை விசிக வரவேற்றுள்ளது.
ராமச்சந்திரன்
(இந்திய கம்யூ. கட்சி) :
மக்களின்
உணர்வுகளுக்கு எதிராக செயல்படுகின்ற ஆளு நரின் நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஆளுநரை திரும் பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். முதல மைச்சர் எடுக்கும் முடிவுகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்றும் துணை நிற்கும்.
வெங்கடேசன் (பாமக):
நீட்
தேர்வு விலக்கு கொண்டு வர வேண்டும் என்ற
கோரிக் கையை வைத்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகாலமாக தமிழ் நாடு மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்களின் இன்னுயிரை போக்கியுள்ளனர். சிறப்பு கூட்டத்தொடர் கூட் டப்படும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவை பாமக வர வேற்கிறது. தமிழ்நாடு
அரசு நீட் தேர்வு சம்பந்தமாக எந்த நடவடிக்கை எடுக்கிறதோ அதற்கு பாமக முழு ஆதரவை வழங்குவோம்.
No comments:
Post a Comment