எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய அரசின் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை மருத்துவ கலந்தாய்வுக்குழு நடத்துகிறது.
புதுவை மாநிலத்தினை இருப்பிடமாக கொண்ட மாணவர்கள் பலர் இடஒதுக்கீட்டு பட்டியலில் விடுபட்டிருந்தனர். இதுதொடர்பாக புதுவை அரசு சார்பில் மருத்துவ கலந்தாய்வுக்குழுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெயர்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இந்தநிலையில் ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை மருத்துவ கலந்தாய்வுக்குழு வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment