பெண்காவல் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

பெண்காவல் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு

ராஜஸ்தான் பாஜக தலைவர்மீது குற்றச்சாட்டு பதிவு

ஜெய்ப்பூர், பிப்.1 பெண் உதவி ஆய்வாளர் ஒருவரை பாஜக ராஜஸ்தான் மேனாள் தலைவர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதற்கு உடந்தையாக இருந்த 2 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர், சமீபத்தில் பில்வாரா  மாவட்டம் பிரதாப் நகர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார்  ஒன்றை அளித்திருந்தார். அதில் மாநில மேனாள் பாஜக தலைவர் தன்னை மிரட்டி பாலியல்வன்கொடுமை செய்தார் என்றும் அதற்கு உடந்தையாக காவல்துறையில் சில உயரதிகாரிகள் இருந்தனர் என்றும் கூறியிருந்தார்.  இதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவலறிக்கையில்,  ராஜஸ்தான் மாநில பாஜக மேனாள் தலைவர் பன்வர் சிங் பலாரா உள்ளிட்ட 12  பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

மூத்த காவல்துறை அதிகாரிகள் இது குறித்துபாதிக்கப்பட்ட பெண் அதிகாரி பிரதாப் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, அவரைஅப்போ தைய கூடுதல் எஸ்பி சஞ்சய் குப்தா, அப்பகுதி பாஜக மேனாள் தலைவர் பன்வர் சிங் பலாராவை சந்திக்கும்படி கூறினார்.

ஆனால்  அவரை சந்திக்க மறுத்தால், இடமாற்றம் செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார்.இந்த மிரட்டலை அடுத்து பாஜக தலைவரை, அந்த பெண் கால்வதுறை உதவி ஆய்வாளர் சந்தித்துள்ளார். 

பா... மேனாள் தலைவர் பன்வர் சிங் அப்போது, அந்த பெண் காவல்துறை உதவி ஆய்வாளரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  பாதிக்கப்பட்ட பெண் காவல்துறை உதவி ஆய்வாளர் புகார் அளித்துள்ளார்.

இதனால் பன்வர் சிங் பலாரா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் காவல்துறை .டி.எஸ்.பி.க்கள் சஞ்சய் குப்தா, கஜேந்திர சிங் ஜோதா சம்பந்தப்பட்ட பெண் எஸ்.அய்.யிடம் முறைகேடாக நடந்து  கொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.’ எனத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment