முதுகலை மாணவர்களுக்கு நேரடி முறையில் பருவ முறைத் தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 3, 2022

முதுகலை மாணவர்களுக்கு நேரடி முறையில் பருவ முறைத் தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை, பிப்.3 முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி மாணவர்களுக்கும் பருவமுறைத் தேர்வுகள் இணையம் மூலமாக நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். அதன்படி 2.2.2022 முதல் இணையம் வழியிலான பருவத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில் முதுகலை பொறியியல் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோருக்கான பருவமுறைத் தேர்வுகள் நேரடி முறையில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கான அட்டவணை பிப்ரவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


No comments:

Post a Comment