ரத்த அழுத்தமானியை பார்த்ததுமே நோயாளிக்கு ரத்த அழுத்தம் சற்றே உயரும், அக்கருவி மூலம் அளக்க சில நிமிடங்கள் ஆகும். இதற்கு மாற்றாக, அய்ந்தே நொடிகளில், நோயாளியின் ரத்த அழுத்தத்தை மட்டுமல்ல, இதயத்துடிப்பு வேகம், ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு, உடல் வெப்பம் மற்றும் மூச்சு விடும் வேகம் என்று அனைத்தையும் சேகரித்துச் சொல்லும் ஒரு கருவியை அமெரிக்காவிலுள்ள மிசவுரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஆக்சிமீட்டரைப் போலவே, இதையும் விரலில் மாட்டவேண்டும். அதிலுள்ள உணரிகள் ஒளியை விரல் தோல் மீது செலுத்த, பிரதிபலிக்கும் ஒளியை வைத்து, ரத்தக்குழாயில் ரத்தம் பயணிக்கும் வேகத்தை கணக்கிடுகிறது. பிறகு கணினியின் உதவியுடன் நோயாளியின் ரத்த அழுத்தத்தையும் பிற தகவல்களையும் கணக்கிடுகிறது. சோதனையில்லுள்ள இக்கருவி 90 சதவீத துல்லியத்துடன் ரத்த அழுத்தத்தை கணிக்கிறது.
No comments:
Post a Comment