சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்படும் மன்றக்கூட்ட அரங்கம்
சென்னை, பிப்.4 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறு வதை யொட்டி சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மன்றக்கூட்ட அரங்கம் திறக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 15 மாநக ராட்சி உட்பட நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழ் நாட்டில் உள்ள மாநக ராட்சி களில் அதிக வார்டுகள் கொண்ட மாநக ராட்சியாக 200 வார்டுகள் கொண்ட பெருநகர சென்னை மாநக ராட்சி இருந்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் தலை மையகமாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ரிப்பன் மாளிகை செயல்பட்டு வருகிறது.
சென்னையின் அடையாளமாக திகழும் ரிப்பன் மாளிகை கடந்த 1909ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பிரசித்தி பெற்ற மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சி யின் 200 வார்டுகளில் பொது மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள கவுன்சிலர்களின் மன்றக் கூட்டம் 2ஆவது தளத்தில் உள்ள மன்றக் கூட்டரங்கில் நடைபெறுவது வழக்கம். இந்த மன்ற கூட்டரங்கில் கடந்த 2015ஆம் ஆண்டு ரிப்பன் மாளிகை யில் அன்றைய மேயர் சைதை துரைசாமி தலைமையில் மன்றக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து தொடர்ந்து 6 ஆண்டுகளாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தல் நடத்தப் படாமலேயே இருந்தது. இதனால் இந்த மன்றக் கூட்டரங்கம் கடந்த 6 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னையின் 200 வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19ஆம்தேதி நடைபெற உள்ளதை யொட்டி, இந்த மன்றக் கூட்டரங்கை சுத்தம் செய்யும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கடந்த இரு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூட்டரங்கின் பழைமை மாறாமல் அங்குள்ள இருக்கைகளை சரி செய்தும், தேவையான இடங் களுக்கு வர்ணம் பூசும் பணியும் நடந்து வருவதாக பெருநகர சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக் கான முடிவுகள் வெளியிடப்பட்ட வுடன், 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரிப்பன் மாளிகையின் 2ஆவது தளத்தில் உள்ள மன்றக் கூட்டரங்கத்தில், பெருநகர சென் னை மாநகராட்சியின் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment