டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
பஞ்சாப் தேர்தலில் சரண்ஜித் சிங் சன்னி முதலமைச்சர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
அரித்துவாரில் தரம் சம்சாத் நிகழ்வில் காவி சாமியார்கள் கூறிய மதவெறி பேச்சு ஹிந்துத்துவா அல்லவாம், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகாவத் விளக்கம்.
உ.பி. தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைத்து கூட்டணி அமைத்துள்ளது நல்ல முயற்சி என ஜே.என்.யு. பல்கலைக்கழக பேராசிரியர்கள் சுப்ரியா ரஞ்சன், பங்கஜ் குமார் கருத்து.
தி ஹிந்து:
வரலாற்று ரீதியாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட சதியின் தொடர்ச்சியே நீட் தேர்வு, தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் கொண்டு வருக, திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தனி நபர் மசோதா தாக்கல்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment