இந்திய - அயலக தமிழர்களின் வளர்ச்சிக்கான படிப்புகள் உருவாக்கம்: தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

இந்திய - அயலக தமிழர்களின் வளர்ச்சிக்கான படிப்புகள் உருவாக்கம்: தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் தகவல்

தஞ்சாவூர், பிப். 1 - இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் அயல்நாடு களில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவும் வகையிலான சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை அறிமுகப் படுத்த உள்ளதாக, தமிழ்ப் பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு அரசின் நிதி நல்கையில், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள, தமிழ் வளர் மய்யம் மற்றும் தமிழ்ப் பண்பாட்டு மய்யம் ஆகியவற்று டன் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங் கங்களின் கூட்டமைப்பான பெட்னா சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப் புகளை நடத்துவதற்கான புரிந்து ணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. 

அத்துடன் தமிழ்நாட்டின் திருப் பூரில் இயங்கி வரும் சண் முகாலயா கலையிசை மன்றத்தில் பரதம் மற்றும் தமிழ் இசைப்பாடங் களில் நிலைப் படிப்பு களைப் பயில் வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த மும் ஜன.29 அன்று கையெழுத் திடப்பட்டன. பெட்னா அமைப் பின் செயலாளர் பாலா சுவாமி நாதன் இணைய வழியாகப் பங் கேற்றார்.

இந்நிகழ்வில் பேசிய துணை வேந்தர் வி.திருவள்ளு வன், “திருக் குறளில் மேலாண்மை, சன்மார்க் கம், பேசும்கலை, எழுதும்கலை, ஆளுமைத் திறன் மேம்பாடு, யோகக்கலை, தமிழ் இசை மற்றும் பரதம் உட்பட பல துறைகளில் சான்றிதழ் மற்றும் பட்டயப்  படிப் புகளை வழங்கப் பாடத்திட்டங்கள் ஆயத்தமாகி வருகின்றன. 

தமிழ்நாடு மட்டுமின்றி, இந் தியாவின் பிற மாநி லங்கள் மற்றும் அயல்நாடுகளில் இணையவழி மூலம்  இப்படிப்புகள் நடத்தப்படும். இந்தியாவின் பிற மாநிலங்கள் மற் றும் அயலகத் தமிழர்களின் அன் றாட வாழ்க்கை மேம்பாட்டிற்குத் துணை நிற்கும் வகையில்  இப் பாடத் திட்டங்கள் அமைக்கப் படும்.

இப்படிப்பு களில் சேரும் மாண வர்கள் மற்றும் இளைஞர்களின் கல்வி நலத்துடன், மனவளமும் முன்னேற்றம் பெறும்  அம்சங்களும் பாடத்திட்டத்தில் உள்ளதுஎன்றார்.


No comments:

Post a Comment