3.2.2022
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
றீ அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 38 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தனித்தன்மை மிக்கதும் பன்முகத்தன்மை வாய்ந்ததும் பல பண்பாடுகளால் ஆனதுமான நமது ஒன்றியம் பிரிவினை மற்றும் சமய மேலாதிக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் இவற்றை எதிர்த்துப் போரிட முடியும் என குறிப்பிட் டுள்ளார்.
தி டெலிகிராப்:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கூட்டமைப்பின் நோக்கம் சமூக நீதி மட்டுமின்றி, கூட்டாட்சித் தத்துவமும், பா.ஜ.க.வால் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது என்பதை வெளிப்படுத்துகிறது என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. - குடந்தை கருணா
No comments:
Post a Comment