நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் முழக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 3, 2022

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் முழக்கம்

பெரியாருக்கும், அண்ணாவிற்கும், கலைஞருக்கும், இன்றைய முதலமைச்சருக்கும் கிடைத்த வெற்றி!

அண்ணாவின் பெரு விருப்பத்தை நோக்கி  நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

சென்னை, பிப்.3 நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் உரை என்பது பெரியாருக்கும், அண்ணாவிற்கும், கலைஞருக்கும், இன்றைய முதலமைச்சருக்கும் கிடைத்த வெற்றி! அண் ணாவின் பெரு விருப்பத்தை நோக்கி நாடு நகர்ந்துகொண்டிருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (3.2.2022) அண்ணாவின் 53 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவ்விவரம் வருமாறு:

அண்ணா மறையவில்லை - திராவிடமாக - திராவிடத்தினுடைய எழுச்சியாக  வாழ்ந்துகொண்டிருக்கிறார்!

தந்தை பெரியாரின் தலைமகனும், முத்தமிழ் அறிஞர் கலைஞருடைய அன்பு அண்ணனும், கோடிக்கணக்கான திராவிட சமுதாயத்தின் மானமும், அறிவும் பெற்றவர்களுடைய தோழ ருமான பேரறிஞர் அண்ணா அவர்களுடைய 53 ஆம் ஆண்டு நினைவு நாள் - அண்ணாவைப் பொறுத்தவரையில், அவர் மறையவில்லை. திராவிடமாக, திராவிடத்தினுடைய எழுச்சியாக, இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அண்ணா தனி மனிதரல்ல -

தந்தை பெரியாரின் தத்துவத்தினுடைய எதிரொலியாக - அதனை மேலும் சிறப்புடன் அரசியல் யானை மிகப்பெரிய அளவிற்கு சிறப்போடு பயணிப்பதற்கு ஏற்பாடு செய்த திரா விடர் ஆட்சியினுடைய மீட்சியே அண்ணா!

அவருடைய கொள்கை என்பது கொடியில் இல்லை -  படத்தில் இல்லை - பாடமாக அண்ணா அவர்கள் இருக்கிறார்கள்.

 சமூகநீதி தத்துவத்தை அனைத்திந்திய அளவிலும் எடுத்துச் சென்றிருக்கிறார்

அந்த கொள்கையை இன்றைக்கும் அனைத்திந்திய அளவிற்குக் கொண்டு செல்லக்கூடிய அளவிற்கு, அண்ணாவின் நினைவு நாளில், நம்முடைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு..ஸ்டாலின் அவர்கள், மிகத் தெளிவான ஒன்றை அண்ணா நினைவு நாளில் சூளுரையாகவும், சிறப்பு முடிவாகவும் இந்தியாவிற்கே அளித்திருக்கிறார்கள்.

அதுதான், தந்தை பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதி தத்துவம். அந்த சமூகநீதி தத்துவத்தை அனைத்திந்திய அளவிலும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

அண்ணா அவர்கள், மாநிலங்களவையில் முழங்கும்போது சொன்னார்கள், 'அனைவருக்கும் அனைத்தும்' என்பதுதான் திராவிடத்தினுடைய தத்துவம். திராவிடம், மற்றவர்களை வெறுப்பதல்ல  - பிரிப்பதல்ல - இணைப்பது என்று தெளிவாகச் சொன்னார்கள்.

அதற்கு முழு வடிவம் தரக்கூடிய அளவில், இன்றைய நம்முடைய முதலமைச்சர் அவர்கள், 38 அரசியல் கட்சித் தலைவர்களுக்குக் கடிதம் எழுதியதன்மூலமாக, நல்ல தொடக்கத்தை அண்ணாவின் நினைவு நாளில் வைத்திருக்கிறார்கள்.

அண்ணாவின் பெரு விருப்பத்தை நோக்கி

நாடு நகர்ந்துகொண்டிருக்கிறது

எனவே, அண்ணா வாழுகிறார் - வாழ்ந்து கொண்டே இருக்கிறார் - திராவிடமாக - திராவிடத்தின் உரிமைகளாக - ஒன்றியத்தில் கூட்டாட்சி என்று சொல்லக்கூடிய அளவில் இருந்தாலும், மாநிலத்தில் அது சுயாட்சியாக மலரவேண்டும் என்பதிலே, அண்ணாவின் பெரு விருப்பத்தை நோக்கி நாடு நகர்ந்துகொண்டிருக்கிறது

எனவே,

அண்ணா வாழ்கிறார்! அண்ணா வாழ்கிறார்!!

பெரியாருக்கும், அண்ணாவிற்கும், கலைஞருக்கும், இன்றைய முதலமைச்சருக்கும் கிடைத்த வெற்றி!

செய்தியாளர்: பா... எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி சொல்லியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து?

தமிழர் தலைவர்: எதார்த்தத்தைத் தெளிவாக  சுட்டிக் காட்டியுள்ளதால் - தமிழ்நாட்டை உணர்ந்தவர் என்று ராகுல்காந்தி என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

இங்கே இருப்பவர்களுக்குப் புரியாத உண்மை- வடக்கே இருக்கும் - இளம்தலைவரான ராகுல் காந்தி தமிழ்நாட்டைப்பற்றித் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, அவர் எந்த அளவிற்குத் தெளிவானவராக இருக்கிறார்கள் என்பதற்கு அர்த்தம் - தமிழ்நாட்டைப்பற்றி இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்களே என்று அவரிடம் கேட்டபொழுது, ''நானும் தமிழன்தான்'' என்று சொல்லியிருக்கிறார்.

சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள், நான் மறுபடியும், 'மறுபிறவி' என்று ஒன்று  இருந்து பிறந்தால், தமிழ்நாட்டில்தான் பிறக்கவேண்டும் என்று சொன்னார்கள்.

எனவே, கொள்கையும், லட்சியமும் கொண்ட எவராக இருந்தாலும், தமிழ்நாட்டின் பெருமையைத்தான் அவர்கள் உணருவார்கள்.

எனவே, அவர்கள் மண்ணால் மாறுபட்டிருந்தாலும், கொள்கையால் ஒன்றுபட்டு இருப்பது - பெரியாருக்கும், அண்ணாவிற்கும், கலைஞருக்கும், இன்றைய முதலமைச்சருக்கும் கிடைத்த வெற்றி.

 சமூக அநீதியால் பாதிக்கப்பட்ட மக்கள்

அத்தனை பேருக்கும் இரட்சகர்!

செய்தியாளர்: சமூகநீதியை பிரகடனப்படுத்தக் கூடிய ஓர் அரசு, சமூகநீதிக்கான ஒரு கூட்டமைப்பை உருவாக்குவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: சமூகநீதியை வெறும் பேச்சாக ஆக்காமல், வெறும் மேடை பேச்சாக மட்டும் ஆக்காமல், தமிழ்நாட்டில் மட்டும்தான் சமூகநீதி என்ற அளவில் நிற்காமல், சமூகநீதி என்பது அனைவருக்கும் அனைத்தும் என்றால், அனைத்து இந்தியாவில் இருக்கின்ற ஒடுக்கப்பட்ட மக்கள், நீதி கிட்டாத மக்கள், சமூக அநீதியால் பாதிக்கப்பட்ட மக்கள் அத்தனை பேருக்கும் இரட்சகராக இருந்து அவர் அறிவித்திருக்கிறார்.

சரியான நேரத்தில், தேவையான ஒன்றை, முறையாக அறிவித்திருக்கிறார்.

அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகநீதிக் கூட்டணி

செய்தியாளர்: இதை தேர்தலுக்கான ஒரு யுக்தியாகப் பயன்படுத்துகிறார் ஸ்டாலின் என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: பார்ப்பவர்களுடைய காமாலைக் கண்களுக்கு அப்படித் தெரியும். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகநீதிக் கூட்டணி.

செய்தியாளர்: ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்ற ஒரு அரசியல் கட்சியின் வாரிசு, இதுபோன்று சொல்வது நியாயமா என்று?

தமிழர் தலைவர்: அதற்குக் காரணமானவர்களுக்கு இன்றைய ஒன்றிய அரசு, கடன் கொடுத்துக்கொண்டுள்ளது. 

இன்றைய ஒன்றிய அரசு எந்த சூழ்நிலையில் இருக்கின்றது என்பதுதான் முக்கியமே தவிர, கடந்த காலத்தில் நடந்ததையெல்லாம் போட்டுக் குழப்பிக் கொள்ளவேண்டிய அவசியமில்லை.

அப்படியானால், இலங்கைக்கும் - நமக்கும் என்ன உறவு? இன்றைக்குக்கூட மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள், சிறை வைக்கப்படுகிறார்கள்.  அப்படிப்பட்ட இலங்கை அரசுக்குத்தான், பல கோடி ரூபாய்களை கடனாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களே -  இதை மறைத்துவிட்டு, ஏன் வேறு எதை எதையோ தேவையின்றிப் பார்க்கிறார்கள்?

தற்காலிக மணவிலக்கு!

செய்தியாளர்: .தி.மு.. - பா... கூட்டணி முறிவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: தற்காலிக மணவிலக்கு!

 இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

No comments:

Post a Comment