ஆடையை காரணம் காட்டி பெண்கள் கல்வி கற்பதை தடுக்க வேண்டாம் - மலாலா
பெங்களூரு,பிப்.9- ஹிஜாப் விவகாரத் தில் கருநாடாகாவில் நடந்தேறி வரும் சம்பவங்களுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கல்வி உரிமைக்கான போராளி மலாலா யூசுப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருநாடக கடலோர பகுதியில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் சிறு பான்மை வகுப்பை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்து கல்வி இயக்குநரகம் உத்தரவிட் டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனிடையில் ஹிஜாப் அணிய தடை விதிக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் காவி சால்வை அணிவோம் என்று சில கல்லூரிகளில் காவி சால்வை அணிந்து மாணவர்கள் வந்தனர்.
இதையடுத்து கருநாடகாவில் மாணவ, மாணவிகள் ஹிஜாப் மற்றும் காவி சால்வை அணியும் பிரச்சினை போராட்டம் கலவரமாக மாறியது. தாவணகெரே, ஷிவமொக்கா மாவட் டங்களில் மாணவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு, தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றது. பள்ளியில் தேசியக்கொடி ஏற்றப்படும் கொடிக்கம்பத்தில் காவிக்கொடியை பறக்கவிட்ட அவலமும் அரங்கேறியது
தொடக்கத்திலேயே ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் கொட்டத்தை அடக்க முடியாத அம்மாநில பாஜக அரசு கலவரம் வெடித்ததையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.
சங் பரிவார மத வெறிக்கும்பலின் வன்முறை வெறியாட்டங்களுக்கி டையே சிறுபான்மை வகுப்பு மாணவி களும் தங்களின் உரிமைக்காக போராடி வருகின்றனர். பெண்களை ஆடையை காரணம் காட்டி கல்வி கற்பதைத் தடுக்கக் கூடாது
மலாலா கண்டனம்
கருநாடகாவில் மதக் கண்ணோட் டத்தில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் சங் பரிவாரக் கும்பலின் வகுப்புவாதத்துக்கு கண் டனம் தெரிவித்துள்ளார் நோபெல் பரிசு பெற்ற பெண்கல்விக்கான உரிமைப்போராளி மலாலா.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நோபல் பரிசு பெற்ற வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உரிமை போராளியுமான மலாலா யூசுப், ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதிக்க மறுப்பது கொடு மையானது என கூறியுள்ளார். இசு லாமிய பெண்களை புறந்தள்ளுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ள அவர், புறக்கணிப்பது தொடர் வது வேதனை தருவதாக ட்விட்டரில் பதிவிட் டுள்ளார்.
மேலும் ஆடையை காரணம் காட்டி பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்க வேண்டாம் என்றும் இந்தியாவைக் கேட்டுக் கொண்டுள் ளார். பெண்களின் ஆடை குறைந் தாலோ கூடினாலோ அது பிரச்சினையாகி விடுகிறது என்றும் மலாலா தெரிவித்தார்.
No comments:
Post a Comment