கொழும்பு, பிப்.7 இலங்கை கடற் படை பறிமுதல் செய்த தமிழ்நாடு மீனவர்களின் 105 விசைப்படகுகள் ஏலம் விடும் பணி தொடங்கியது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களின் 105 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. கடலோர பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது தொடர்கதையாகி உள்ளது. கடந்த காலங்களில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களில், மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். ஆனால் மீன வர்களுக்கு சொந்தமான விசைப் படகு மற்றும் நாட்டு படகு உள்ளிட்ட 105 படகுகளை விடுதலை செய்யாமல் இலங்கை அரசு வைத்திருந்தது. படகுகளை விடு விக்க வேண்டும் உள்பட தமிழ்நாடு மீனவர்கள் பல்வேறு கோரிக்கை களை வைத்திருந்தனர்.
இதனிடையே மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 105 படகுகளையும் இலங்கை அரசு அரசுடமையாக்கியது. அடுத்த கட்டமாக 105 படகுகளும் 5 நாட்கள் ஏலம் விடப்படும் என தெரிவித்தனர்.
இதற்கு தமிழ்நாடு அரசு, பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், முதல்நாளான இன்று இலங்கை காரைநகர் துறை முகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 65 விசைப்படகுகளை ஏலம் விடும் பணியானது தொடங்கப் பட்டுள் ளது.
விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்தந்த துறை முகங்களில் இருந்து ஏலம் விடப்படு கிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமான விசைப்படகு களை இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு கட்டமாக கோரிக்கை வைத்த நிலையில் படகுகள் இன்று (7.2.2022) ஏலம் விடப்படுவது ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்த ளிப்பை ஏற் படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment