உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை எதிர்த்து பரப்புரை செய்யும் நிதிஷ்குமார்பட்னா,
பிப். 3- பீகாரில் பாஜக வுடன் கூட்டணி வைத்துள்ள நிதிஷ்குமார் உத்தரப்பிரதே சத்தில் அக்கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்ய உள்ளார்.
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமாரின் அய்க்கிய ஜனதா தளம் கட்சியும் பாஜகவும் கூட்டணி வைத்துள்ளன. ஆனால் இந்த மாதம் முதல் தேர்தல்கள் நடைபெற உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் இவ்விரு கட்சிகளும் கூட் டணி அமைக்கவில்லை. மாறா கத் தனித்துப் போட்டியிடு கின்றன. அதே நேரத்தில் பீகா ரில் பாஜக- அய்க்கிய ஜனதா தளம் கூட்டணி தொடர்கிறது.
சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் நடை பெற உள்ள சட்டசபை தேர்த லுக்கான அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளி யானது. அதில் அக்கட்சியின் தலைவர்களான பீகார் முதல மைச்சர் நிதிஷ்குமார், மற்றும் ஒன்றிய அமைச்சர் ராம்சந்திர பிரசாத் சிங் ஆகியோர் பெயர் இடம் பெறவில்ல என்பதால உபியில் அவர்கள் பிரச்சாரம் செய்யப் போவதில்லை எனக் கூறப்பட்டது.
சமீபத்தில் அய்க்கிய ஜனதா தள திருத்தப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.. இந்த 15 பேர்களில் நிதிஷ்குமார் மற் றும் ராம்சந்திர பிரசாத் சிங் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன..
ஆகவே நிதிஷ் குமாரும் ராம்சந்திர பிரசாத் சிங்கும் உபி மாநிலத்தில் பாஜகவை எதிர்த்து பிரசாரம் செய்ய உள்ளது தெளிவாகி உள்ளது. அதாவது பாஜக கூட்டணியில் இருந்து கொண்டே பாஜக வுக்கு எதிராக நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
அய்க்கிய ஜனதா தள மூத்த உறுப்பினர் ஒருவர் இது குறித்து, “உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து இட ஒதுக்கீடு செய்யும் பொறுப்பு அமைச்சர் சந்திர பிரசாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு கூட்டணி அமைத் துப் போட்டியிடுவதில் உடன் பாடு ஏற்படவில்லை. எனவே நாங்கள் வேறுவழியின்றி பாஜ கவை எதிர்த்து வேட்பாளர் களை நிறுத்த வேண்டிய கட் டாயம் ஏற்பட்டுள்ளது. இத னால் முதலமைச்சரும் அமைச் சரும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்ய உள்ளனர்’ என்று தெரிவித் துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment