தீர்ப்புக்கு ஆதரவாகப் போராட வேண்டிய கட்டத்திற்குக் காலங்கள் மாறியிருக்கின்றன! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 7, 2022

தீர்ப்புக்கு ஆதரவாகப் போராட வேண்டிய கட்டத்திற்குக் காலங்கள் மாறியிருக்கின்றன!

ஒரு காலத்தில் சட்டத் திருத்தம்வேண்டும் - அந்தத் தீர்ப்புக்குப் பதிலாக என்று நாம் போராடினோம்இன்றைக்குத் தீர்ப்புக்கேற்ப சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று

தீர்ப்புக்கு ஆதரவாகப் போராட வேண்டிய கட்டத்திற்குக் காலங்கள் மாறியிருக்கின்றன!

‘‘ஆணவக் கொலைகளும் - உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பும்’’

காணொலி சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

சென்னை, பிப். 7 ஒரு காலத்தில் சட்டத் திருத்தம் வேண்டும் அந்தத் தீர்ப்புக்குப் பதிலாக என்று நாம் போராடினோம். இன்றைக்குத் தீர்ப்புக்கேற்ப சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தீர்ப்புக்கு ஆதரவாகப் போராட வேண்டிய கட்டத்திற்குக் காலங்கள் மாறியிருக்கின்றன என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘ஆணவக் கொலைகளும் - உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பும்!’’

கடந்த 4.12.2021  அன்று மாலை    ‘‘ஆணவக் கொலை களும் - உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பும்‘‘ எனும் தலைப்பில் காணொலிமூலம் நடைபெற்ற  கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

சட்டம் இயற்றக்கூடிய அமைப்புகள் மூன்றுதான்.

1. அரசாங்கம் 2. சட்டமன்றம் - நாடாளுமன்றம் 3. நீதிமன்றம்.

நீதிமன்றம் தெளிவாக இடித்துச் சொல்லுகிறது - யாருக்கு? நிர்வாகத்திற்கு, ஆட்சிக்கு!

சட்ட ஆணையத்தின் 242 ஆம் அறிக்கை!

சட்டமன்றத்தில் என்ன செய்யவேண்டும் என்று சொல்வதற்கு, இந்தக் கருத்தை எடுத்துக்கொண்டு, சட்ட ஆணையம்-242 ஆம் அறிக்கை - ஒவ்வொரு முறையும் சட்ட ஆணையத்தை நியமிக்கிறார்கள். எவ்வெப்பொழு தெல்லாம் சட்டத்தில் திருத்தங்கள் செய்யவேண்டும்? என்னென்ன புதிய சட்டங்களைக் கொண்டு வர வேண் டும் என்பதைப்பற்றியெல்லாம் மிக ஆழமாக எடுத்துச் சொல்கிறார்கள்.

அதில்,

The Law Commission of India in is 242 report suggested the Legal framework of prevention of Interference with the Freedom of Matrimonial Alliances (in the name of Honour and Tradition): 

அதாவது சம்பிரதாயம்தான் எங்கள் ஜாதி வழக்கம். எங்கள் ஜாதிப் பெருமை என்னாவது? என்று பேசுகின்ற காட்டுமிராண்டிகள் இருக்கிறார்களே, அந்தக் காட்டு மிராண்டிகள் புரிந்துகொள்வதற்காக உச்சநீதிமன்றம் சொல்கிறது.

என்ன சொல்கிறது என்றால்,

242  ஆம் சட்ட ஆணையத்தில் மிகத் தெளிவாக, எங்கள் ஜாதி கவுரவம் போய்விட்டது; எங்கள் சம்பிர தாயம் போய்விட்டது என்று சொல்வதை எதிர்த்து,

The Law Commission versus opinion that there must be a threshold bar against congregation or assembly for the purpose of objecting to and condemning the conduct of young persons of marriageable age marrying according to their choice, the ground of objection being that they belong to the same gotra or to different castes or communities.

இந்த மாதிரி ஒரு கூட்டம் போட்டு, ஜாதி பஞ்சாயத்து, கட்டப் பஞ்சாயத்து, கிராமப் பஞ்சாயத்து என்று போட்டு, அதில் இதுபோன்று யாரும் செய்யக்கூடாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வரக்கூடியவர்களை அடை யாளம் காணவேண்டும்; இதை  எதிர்ப்பவர்களை விட்டுவிடக் கூடாது.

திராவிடர் கழகத்தினுடைய தீர்மானம் அல்ல!

சொல்வது நாங்கள் அல்ல!

திராவிடர் கழகத்தினுடைய தீர்மானம் அல்ல!

வீரமணியினுடைய பேச்சல்ல!

பெரியாருடைய கருத்தல்ல!

இந்தியாவினுடைய சட்ட ஆணையம் - இவ்வளவு ஆணவக் கொலைகளுக்குப் பிறகு, 242 ஆவது அறிக் கையைக் கொடுக்கின்றபொழுது சொல்லுகிறார்கள்.

The Panchayatdars or caste elders have no right to interfere with the life and liberty of such young couples whose marriages are permitted by law and they cannot create a situation whereby such couples are placed in a hostile environment in the village/locality concerned and exposed to the risk of safety. Such highhanded acts have a tendency to create social tensions and disharmony too. No frame of mind or belief based on social hierarchy can claim immunity from social control and regulation, in so far as such beliefs manifest themselves as agents of enforcement of right and wrong. The very assembly for an unlawful purpose viz. disapproving the marriage which is otherwise within the bounds of law and taking consequential action should be treated as an offence as it has the potential to endanger the lives and liberties of individuals concerned.

இதன் தமிழாக்கம் வருமாறு:

பஞ்சாயத்துகளுக்கோ, இதர ஊர் பெயரிவர்கள் என்ற பெயரில் கூட்டப்படும் கூட்டங்களுக்கோ சட் டத்தின் படி நடந்த திருமணங்களில் தலையிட உரிமை இல்லை. மேலும் திருமணமானவர்கள் பாதுகாப்பாக இருக்கும் சூழல் அங்கு (வாழும் பகுதியில்/கிராமத்தில்) ஏற்படாது. அங்கு அவர்களின் உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் அடாவடித்தனமான செயல்கள் சமூகப் பதட்டங்களையும், நல்லிணக்கச் சீர்கேட்டையும் உருவாக்கும் சூழல் உள்ளது.

 ஜாதி ரீதியில் சமூகத்தின் போக்கை அடிப்படையாகக் கொண்டவர்களிடம் சீர்திருத்த முற்போக்குச் சிந்தனை களை எதிர்பார்க்க முடியாது. ஜாதிய மற்றும் குறுகிய இனப்பற்றுக்கொண்டவர்கள் தங்களின் ஜாதிய சமூக வெறுப்பு நோக்கத்திற்காக கூடுவது, அதாவது. சட் டத்தின் வரம்பிற்குள் இருக்கும் திருமணத்தை மிரட்டு வது தடுக்க நினைப்பது ஒரு குற்றமாக கருதப்பட வேண்டும். ஏனெனில் தொடர்பான  நபர்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கு ஆபத்தை விளை விக்கும்.

மிக முக்கியமாக சுட்டிக்காட்டப்படவேண்டிய விஷயம் என்னவென்றால்,

 In Shakti Vahini Versus Union of India and Others

இந்த வழக்குகள் வருகின்ற நேரத்தில், அதில் மிக முக்கியமாக சுட்டிக்காட்டவேண்டியது என்னவென்றால், 2018 இல் தீர்ப்பு வந்தது.

ஒன்றிய அரசு ஆட்சி மாறிய பிறகு - எந்த ஆட்சி வந்தாலும், மாற்று வரவில்லை என்பதைச் சுட்டிக் காட்டவேண்டும்.

 2018,  Shakti Vahini Versus Union of India The Court Directed  Union of India and the State Governments and the Central Government to take preventive steps to combat honour crimes, to submit a National Plan of Action and State Plan of Action to curb crimes of the said nature and further to direct the State Governments to constitute special cells in each district which can be approached by the couples for their safety and well being. That apart, prayers have been made to issue a writ of mandamus to the State Governments to launch prosecutions in each case of honour killing and take appropriate measures so that such honour crimes and embedded evil in the mindset of certain members of the society are dealt with iron hands.

இதன் தமிழாக்கம் வருமாறு:

2018, சக்தி வாஹினி எதிர் ஒன்றிய அரசின் வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆணவக் கொலைகளை எதிர்த் துப் போராடுவதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜாதிமறுப்பு மணம் செய்தவர்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக அணுகக்கூடிய சிறப்புப் பிரிவுகளை மாநில அரசுகள் அமைக்கவேண்டும். அது மட்டுமல்லாமல், ஆணவக் கொலைகள் தொடர்பான  வழக்குத் தொடரவும், சமூகத்தில்  சிலரது நடவடிக்கை யால் நடக்கும் இத்தகைய ஆணவக்கொலைகள் மற்றும் மிரட்டல்கள் போன்றவற்றை கையாள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கவும்  ஆணையிடப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் அத்தனைக்கும் நாங்கள் தாக்கீதுகள் கொடுத்திருக்கிறோம். கவுரவக் கொலைகள் என்பதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்பதைச் சொல்லி யிருக்கிறோம். இந்தியா முழுக்க இருக்கக் கூடிய ஒன்றை செய்யவேண்டும்.

பெரியார் சொன்ன கருத்தும், நாம் போராடியதும் வீண் போகவில்லை. 18 உயிர்கள் பறிபோனதே - அவர்களை பலி கொடுத்தார்களே - அவர்கள் மனு போடவில்லை - ஓய்வூதியம் வாங்கவில்லை - மானியம் வாங்கவில்லை - நிலம் வாங்கவில்லை - ஆனால், வெற்றியைப் பறித்திருக்கிறார்கள். அவர்களின் உயிர்த் தியாகம் வீண்போகவில்லை. நாம் துயரப்பட்டாலும், அதைத் துடைத்துக்கொண்டு நாம் பெருமைப்படுவோம்.

தீர்ப்புக்கு ஆதரவாகப் போராட வேண்டிய கட்டத்திற்குக் காலங்கள் மாறியிருக்கின்றன

அவர்களுக்கு இந்தத் தீர்ப்பை காணிக்கை யாக்குகிறோம். ஒரு காலத்தில் சட்டத் திருத்தம் வேண்டும் அந்தத் தீர்ப்புக்குப் பதிலாக என்று நாம் போராடினோம். இன்றைக்குத் தீர்ப்புக்கேற்ப சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தீர்ப் புக்கு ஆதரவாகப் போராட வேண்டிய கட்டத் திற்குக் காலங்கள் மாறியிருக்கின்றன.

பெரியார் வெற்றியை நோக்கிப் போய்க் கொண் டிருக்கின்றார்.

பெரியாரும், பெரியாருடைய கொள்கைகளும், விஞ்ஞானமும் ஒருபோதும் தோற்காது என்பதற்கு இது அடையாளம்.

பெரியார்தான் கேட்டார், வயது வந்த ஓர் ஆணும், பெண்ணும் விரும்புகிறார்கள் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டால், அதைத் தடுப்பதற்கு அவர்களுடைய பெற்றவர்களுக்கோ, மற்றவர்களுக்கோ உரிமையில்லை.

18 வயது ஆனவுடன், அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்திருக்கிறீர்கள். 21 வயதாக இருந்ததை 18 வயதாகக் குறைத்துவிட்டீர்கள். அவர்களுக்குத் தெளிவு இருக்கிறது என்பதினால்தானே!

இன்னாருக்குத்தான் நீங்கள் வாக்களிக்கவேண்டும் என்று அவர்களைக் கட்டாயப்படுத்த முடியுமா? யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று எங்களிடம் சொல்லிவிட்டுப் போடுங்கள் என்று சொல்ல முடியுமா?

நாங்கள் நினைப்பதற்கு மாறாக நீங்கள் வாக்களித்து விட்டீர்கள்; ஆகவே, உங்களுடைய கழுத்தை வெட்டு கிறோம் அல்லது தலைகீழாகத் தொங்கவிடுகிறோம் என்று சொல்ல முடியுமா?

திருமணம் என்பது வாழ்நாள் பிரச்சினை!

வாக்களிப்பது என்பது ஒரு நாள் பிரச்சினை - அதற்கே இவ்வளவு சுதந்திரம் கொடுத்துவிட்டீர்கள். திருமணம் என்பது வாழ்நாள் பிரச்சினை - அந்தப் பிரச்சினையில், ஆணும் - பெண்ணும் ஒருவரை யொருவர் விரும்பிவிட்டார்கள். அவர்களுக்கு அறிவு இருக்கிறது, ஆற்றல் இருக்கிறது, திறமை இருக்கிறது - அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். பெற் றோர்களின் கடமையை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், அதற்காக மகிழ்ச்சியடைவேண்டுமே தவிர, அதற்காக வருத்தப்படுவதில் என்ன நியாயம்?

ஆகவேதான், திருமண வாழ்க்கைக்கான முழுப் பொறுப்பினை அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள்.

மூன்றாவது நபர் தலையிடுவது ஆணவம், அகம் பாவம், அதிகப்பிரசங்கித்தனம் என்று பெரியார் சொன்னார். அதைத்தான் இன்றைக்கு உச்சநீதிமன்றம் அப்படியே சொல்கிறது.

ஜாதி என்பது ஒரு மனநோய்!

ஜாதியை ஒழிக்கவேண்டுமானால், அது சாதா ரணமான வேலையல்ல என்று பெரியார் சொன் னார். அதையேதான் அம்பேத்கர் அவர்களும் சொன்னார்.

அது ஒரு கட்டடம் அல்ல - சம்மட்டியை எடுத்து அடித்து உடைப்பதற்கு.. அது ஒரு மனநோய் -

நோபல் பரிசு பெற்ற குன்னர்மிருடல் - ‘ஏசியன் டிராமா  என்ற நூலில் அவர் மிகத் தெளிவாக ஒன்றை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

ஒரு பெரிய அறுவைச் சிகிச்சையின்மூல மாகத்தான் இதை (ஜாதி ஒழிப்பை) செய்ய முடியுமே தவிர, வேறு வகையில் செய்ய முடியாதுஎன்று.

அதைத்தான் பெரியார் அன்றைக்குச் சொன் னார்; இன்றைக்கு உச்சநீதிமன்றமும் சொல்லியிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆறுமுக சேர்வை - தமிழ்நாடு

அதேபோல, லதாசிங் வழக்கு

அதேபோல, சக்திவாகினி - யூனியன் ஆஃப் இண்டியா

கடந்த நவம்பர் 26ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத்தான் கைகளில் இப்பொழுது வைத்திருக்கிறோம்.

இதில் ஏற்கெனவே 2018 ஆம் ஆண்டு கொடுத்த தீர்ப்பில், மாநில அரசுகள் என்னென்ன செய்யவேண்டும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறது சட்டங்களை இயற்றுங்கள் என்று.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம்தான் சட்டம் செய்திருக்கிறது!

அதை ஒரே ஒரு மாநிலம்தான் அந்த அடிப்படையில் சட்டம் செய்திருக்கிறது. காங்கிரஸ் ஆண்டுகொண் டிருக்கின்ற ராஜஸ்தான் மாநிலம்தான் செய்திருக்கிறது.

அடுத்ததாக, தமிழ்நாடு அரசு செய்யும்; நிச்சயமாக செய்யும். நாம் அதற்கான அழுத்தங்களைக் கொடுப்போம்.

கொள்கை ரீதியாகவே இந்த வாய்ப்புகள் வருகின்றன. அதில் மூன்று தத்துவங்களை சொல்லியிருக்கிறார்கள். இதை நாம் வலியுறுத்தி சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அந்த அடிப்படையில் சொல்லவேண்டுமானால்,

The Court Suggested Preventive step.

கூலிப் படையை வைத்து கொலைகள் நடப்பதைத் தடுப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதற்கான திட்டங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இதற்கு முந்தைய ஓர் அரசு, திராவிட முத்திரையைக் குத்திக் கொண்டிருந்தாலும், அதனை செயல்படுத்தவில்லை.

The Court Suggested Preventive step. 

Preventive, Remedial and Punitive measures

மூன்று வகையாக....

மூன்று வகையாக அவற்றைப் பிரித்துக் கொடுத் திருக்கிறார்கள்.

ஒன்று, வருவதற்கு முன்பாக தடுப்பணையை எப்படி கட்டுவது.

இரண்டாவது, வந்த பிறகு, அதற்கான தீர்வுகளை உண்டாக்குவது.

மூன்றாவது, எல்லாவற்றையும் மீறி நடந்துவிட்டால், கடுமையான தண்டனையை அளித்து, இனிமேல் அதுபோன்று நடக்காமல் இருப்பதற்குரிய வழியை செய்யவேண்டும்.

விடுதலைதலையங்கம் தீட்டியது!

இதுகுறித்து விடுதலையில் 1.12.2021 அன்றுமுதல மைச்சரின் முக்கிய கவனத்திற்குஎன்று தலைப்பிட்டு தலையங்கம் வெளியிட்டதோடு, பக்கத்திலேயே ஆண வக் கொலைகள் ஒழிக்கப்படுவதற்கும், ஜாதி ஒழிப் பிற்கும் ஒன்றிய அரசும், மாநில அரசும் என்னென்ன செய்யவேண்டும் - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புரை என்ன என்று அதில் தெளிவாக வெளியிட்டு இருக்கிறோம்.

உச்சநீதிமன்றத்தின் மூவர் கொண்ட ஒரு அமர்வு (ஜஸ்டீஸ் எல்.நாகேஸ்வரராவ், ஜஸ்டீஸ் சஞ்சீவ் கண்ணா, ஜஸ்டீஸ் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அருமையான தீர்ப்பை 2021 நவம்பர் 26ஆம் தேதியன்று வழங்கியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 1991ஆம் ஆண்டு ஒரு பெண் உட்பட 3 பேர் ஜாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் - மேல் முறையீட்டு வழக்காக விசாரிக்கப்பட்டதில் அளிக்கப் பட்டுள்ள தீர்ப்பினை, ஜாதி ஒழிப்புப் போராளிகளும், முற்போக்காளர்களும் நிச்சயம் வரவேற்றுப் பாராட்டும் வகையில் சிறந்த தீர்ப்பாக (Landmark Judgement) அது அமைந்துள்ளது.

அத்துடன் ஒன்றிய அரசும், மாநில அரசும் உடனடியாக ஜாதி ஆணவக் கொலை வழக்கிலிருந்து ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் தம்பதியினரைப் பாதுகாப்பது பற்றியும், ஜாதி பஞ்சாயத்து நடத்தி, ஜாதி வெறியுடன் நடந்து கொள்பவர்களை எப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதையும் மிகவும் துல்லியமான, வழிகாட்டும் நெறிகளையே வகுத்துச் சொல்லியுள்ள தீர்ப்பாக அமைந்து வரலாறு படைத்துள்ளது.

(தொடரும்)

No comments:

Post a Comment