சென்னை, பிப்.2 முல்லைப் பெரியாறு அணையின் பாது காப்பை மறுஆய்வு செய்ய அவசியம் இல்லை என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (1.2.2022) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
முல்லைப் பெரியாறு அணை யில் காலவாரியான நீர்மட்டம், அணையின் வழிந்தோடி மதகின் கதவுகளை இயக்குதல், அளவு மானிகள் பொருத்துதல், அணை பாதுகாப்பு ஆகியவை குறித்து கேரளாவைச் சேர்ந்த 4 தனி நபர்கள், 2020 மற்றும் 2021இல் உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.
இந்த வழக்குகளுக்குத் தேவை யான மறுப்பு மனுக்களை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்குகள் 15.12.2021 அன்று விவாதத்துக்கு வந்தபோது வாதி, பிரதிவாதிகள் ஏதேனும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய விரும்பினால் வருகிற 4ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என ஆணையிட்டு, வழக்கை இந்த மாதம் 3ஆவது வாரத்துக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
இந்த வழக்குகளில் தமிழ் நாடு, கேரள அரசுகள் முல்லைப் பெரி யாறு மேற்பார்வைக் குழு மற்றும் ஒன்றிய ஜலசக்தி அமைச்சகம் ஆகியவை பிரதி வாதிகளாகவும் சேர்க்கப்பட் டுள்ளார்கள். தமிழ் நாடு அரசு அதன் பதில்மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் 6.2.2021, 20.4.2021, 16.11.2021 மற்றும் 14.12.2021 தேதிகளில் தாக்கல் செய்துள் ளது.
முல்லைப் பெரியாறு மேற் பார்வைக் குழுவும், ஒன்றிய நீர்வள குழுமமும் இணைந்து பதில்மனுக் களை 19.4.2021 மற்றும் 14.10.2021 தேதிகளில் தாக்கல் செய்ததுடன், 27.1.2022 ஆம் தேதியில் மேலும் ஒரு நிலையறிக்கையை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள் ளன.
இந்த மனுவில், 27.1.2006 மற்றும் 7.5.2014 ஆகிய தேதிகளில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அணை எல்லாவிதத்திலும் பாதுகாப் பாக இருக்கிறது என்றும், எஞ்சிய பலப்படுத்தும் பணிகள், பராமரிப்பு மற்றும் செப்பனிடும் பணிகளை குறிப்பிட்ட காலத் துக்குள் மேற் கொள்ள வேண் டும் என்றும் குறிப் பிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய துடன், இப்பணிகளை மேற்கொள்ள கேரள அரசு ஒத்துழைக்காமல் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் முல்லைப் பெரியாறு அணையில் மேற்பார்வைக்குழு 14 முறை பார்வையிட்டதாகவும், அணை பாதுகாப்பாக உள்ள தாகவும் அதன் பதில்மனுவில் தெரிவித்துள்ளது.
இருப்பினும் பதில்மனுவின் ஒரு பகுதியில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு தேவை என குறிப்பிட்டுள்ளது, முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.
உச்சநீதிமன்றம் அதன் 27.2.2006 மற்றும் 7.5.2014 தேதி களில் வழங்கிய ஆணைகளில், எஞ்சிய பலப்படுத்தும் மற்றும் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டபின்தான் சிறப்பு நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்யவேண்டும் என்றும், அதன் பின் நீர்மட்டத்தை 152 அடிவரை உயர்த்தலாம் என் றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு பணிகளை முடித்த பின்தான் எந்த ஒரு ஆய்வும் செய்யப்பட வேண்டுமே தவிர, தற்போது அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய எந்த அவசியமும் இல்லை. அணையின் நீர்க்கசிவு, சுண் ணாம்பு வெளி யேற்றம் இவை அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக மிகக் குறைவாகவே உள்ளன. ஆகையால் எந்த வகையில் பார்த் தாலும் அணை யின் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய தற்போது அவசியமில்லை என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாகும்.
தமிழ்நாடு அரசு பதில்மனு
ஒன்றிய நீர்வள குழுமத்தின் நிலையறிக்கைக்கான பதில்மனுவை உச்சநீதிமன்றத் தில் வருகிற 4ஆம் தேதிக்குள் தக்க நடவடிக்கைக்காக தமிழ் நாடு அரசு தாக்கல் செய்யும். நமது நிலைப்பாடு குறித்த தகுந்த வாதங்களை தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக் கும்.
தமிழ்நாட்டின் உரிமை களையும் விவசாயிகளின் நலன் களையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ் நாடு அரசு மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறியுள் ளார்.
No comments:
Post a Comment