முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், தோழர் எஸ்.செங்குட்டுவன் அவர்களது தந்தையுமான மானமிகு சா. சன்னாசி (வயது 94) அவர்கள் சுந்தரப்பெருமாள் கோயில் என்ற ஊரில் நீண்ட காலம் இயக்கப் பணி செய்து வந்தவர்; டேப்பிசைக் கலைஞரும்கூட . தந்தை பெரியார் கொள்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வாழ்ந்தவர் - நேற்று (9.2.2022) அவரது இல்லத்தில் மறைந்தார் என்று அறிய மிகவும் துயருறுகிறோம்.
தந்தை பெரியார் இயக்கத்தில் தீவிரமாக உழைத்தவர்; பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.
அவரது பிரிவால் வாடும் - வருந்தும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்.
திராவிடர் கழகம்
சென்னை
10-2-2022
No comments:
Post a Comment