கரூர் மாவட்ட தேர்தல் பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் உறுதி
சென்னை, பிப்.10 நீட் தேர்வை ரத்து செய்யும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ஆம் தேதி நடை பெறுகிறது. இதையொட்டி கரூர் மாநகராட்சியில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக் கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கரூர் பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்து பேசினார்.
பின்னர் புகழூர், பள்ளப்பட்டி நகராட்சிகள், புஞ்சை தோட்டக்குறிச்சி, அரவக்குறிச்சி பேரூராட்சி வேட்பாளர் களை ஆதரித்து வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவிலும், கிருஷ்ணராய புரம், புலியூர், உப்பிடமங்கலம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் ஆகிய பேரூராட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கிருஷ்ணராயபுரத்திலும், குளித்தலை நகராட்சி, மருதூர், நங்க வரம் பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்து குளித்தலை பேருந்து நிலை யத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
கரோனா அலை
கரூர் மாவட்டத்திற்கும் தி.மு.க.வுக் கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கடந்த 1957-ஆம் ஆண்டு மேனாள் முதல்-அமைச்சர் கலைஞரை குளித் தலை தொகுதியில் வெற்றி பெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத் தீர்கள். அதுபோல் தற்போது நடை பெறும் உள்ளாட்சி தேர்தலில் போட் டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட் டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
கரோனா 2-ஆவது அலையின்போது தி.மு.க. ஆட்சி அமைந்தது. மருத்துவ மனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக் கைகள் தட்டுப்பாடு நிலவியது. இதை யடுத்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் அனைத்து அமைச்சர் களையும் களத்தில் இறக்கி தீவிர பணியாற்றிய தோடு தடுப்பூசி செலுத் தப்பட்டது. இதன் காரணமாக கரோனா 3-ஆவது அலையை நாம் எளிதாக கடக்க முடிந் தது. அ.தி.மு.க. ஆட்சியில் 1 கோடி தடுப்பூசி போட்ட நிலையில் தி.மு.க. ஆட்சி அமைந்த 8 மாதங்களில் 9 கோடி தடுப்பூசிகளை போட்டுள்ளோம்.
பெட்ரோல், பால் விலை குறைப்பு
தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு அமைந் தவுடன் தேர்தல் வாக்குறுதியான கரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் கொடுத்தோம். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள் ளோம். ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளோம். பெண்களுக்கு இலவச பேருந்து பயண வசதியையும் நிறைவேற்றி உள்ளோம்.
தி.மு.க.வுக்கு வாக்களிக்காதவர் களுக்கும் சேர்ந்து நல்ல ஆட்சி அமைப் போம் என்று சொன்னதை செய்து காட்டியவர் தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நீட் தேர்வு ரத்து
நீட் தேர்வு ரத்துக்கு ரகசியம் உள்ளதாக உதயநிதி சொன்னார் என எதிர்க்கட்சி தலைவர் கூறி வருகிறார். ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாட்டி லும் நீட் தேர்வு நடைபெறவில்லை. அவர் இறப்புக்கு பின் நடந்த நீட் தேர்வின் காரணமாக இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
எனவே எங்கள் மாணவர்களுக்கான கல்வி உரிமையை நிச்சயம் பெற் றுத்தருவோம். நீட் தேர்வு ரத்து செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம். அதேபோல் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய் யப்படுவதுடன், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங் கப்படும்.
தடுப்பணை அமைக்க நிதி
குளித்தலை அருகே உள்ள மருதூர் காவிரி ஆற்றுப் பகுதியில் தடுப்பணை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 51,531 மனுக்கள் பெறப்பட்டதில் 50,722 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும், மின் சாரம், மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, கிருஷ்ண ராயபுரம் சட்டமன்ற உறுப் பினர் சிவகாமசுந்தரி, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் நகர செயலாளர் மோகன்ராஜ், பேரூ ராட்சி வார்டு வேட்பாளர் சவுந்தரப்பிரியா, கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி வார்டு வேட்பாளர்கள் சசிகுமார், சேதுமணி, கரூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சேகர் என்கிற குணசே கரன் மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட் பாளர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment