புதுடில்லி, பிப். 1 ஒன்றிய அரசு வரி வருவாயைப் பற்றி மட்டுமே கவனத்தில் கொள்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “சென்ற ஆண்டு ஏப்ரல்-நவம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் முந்தைய ஆண்டை விட 50 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜூலையில் இருந்து ஜிஎஸ்டி வரி வருவாய் மாதம் ரூ.1 லட்சத்தைத் தாண்டி உள்ளது.இவ்வாறு பொதுமக்களைக் கஷ்டப்படுத்தி அதிக வரி வசூல் செய்வதை மோடி அரசு சாதனையாக நினைக்கிறது. அரசுக்கு அதிக வரி வசூல் வேண்டுமே தவிர மக்கள் வலியைப் பற்றி எல்லாம் கவலை இல்லை’’ எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு இட்டுள்ளார்.
No comments:
Post a Comment