டில்லியின் ஜாமியா பகுதியில் ராம்பக்த்கோபால் என்ற இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர். சி.ஏ.ஏ. ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி சுட்டதில், ஷாதாப் என்ற மாணவர் காயமடைந்தார்,
பின்னர் ராம்பக்த் கோபால் காவல்துறையினரால் பாதுகாப்பாக அந்த இடத்தில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு (09.12.2021) அவரது வீட்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் டில்லி மாநில இணைக்காவல் ஆணையர் கலந்துகொண்டார்.
அவருடன் எடுத்த ஒளிப்படத்தைப் பகிர்ந்த ராம்பக்த கோபால் எங்கள் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த காவல்துறை ஆணையர் திருவீரேந்திர கத்யான் அவர்களை நட்போடு வரவேற்று மகிழ்ந்தேன் என்று படத்தை பகிர்ந்துள்ளார்.
கிட்டத்தட்ட தலைநகர் டில்லியில் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் வீட்டு திருமண நிகழ்வில் உயர் காவல்துறை அதிகாரி கலந்துகொள்கிறார்.
கடந்த ஆண்டு பொது வெளியில் துப்பாக்கியால் சுட்ட ஒருவருக்கு இந்த அரசு கொடுத்த தண்டனை இதுதான்
No comments:
Post a Comment