நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பிரச்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 5, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பிரச்சாரம்

சென்னை, பிப்.5   தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலி னும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் காணொலி மூலம் தேர்தல் பிரச் சாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற கூட்டணி சார்பில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட் பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘உள் ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி’ என்ற தலைப்பில் காணொலி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி, 6ஆம்தேதி (நாளை) கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட் சிகளுக்கு போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பா ளர்களை ஆதரித்து காணொலி பிரசாரம் மேற்கொள்கிறார். 

அதைத் தொடர்ந்து 7ஆம்தேதி சேலம் மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்தும், 8ஆம்தேதி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித் தும்  பிரச்சாரம் மேற்கொள்ள இருக் கிறார்.

பின்னர், 9ஆம்தேதி தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித் தும், 10ஆம்தேதி ஈரோடு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்தும், 11ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்தும் மு.க.ஸ்டாலின் காணொலி பிரச்சாரம்  மேற்கொள்ள இருக் கிறார். 

இதைத்தொடர்ந்து 12ஆம்தேதி திருப்பூர் மாவட்ட வேட்பாளர் களுக்கு ஆதரவாகவும், 13ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட வேட்பாளர் களுக்கு ஆதரவாகவும், 14ஆம்தேதி மதுரை மாவட்ட வேட்பாளர் களுக்கு ஆதரவாகவும், 15ஆம்தேதி தஞ்சை மாவட்ட வேட்பாளர் களுக்கு ஆதரவாகவும், 17ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட வேட்பா ளர்களுக்கு ஆதரவாகவும் மு.க.ஸ்டாலின் காணொலி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment