காவல்துறை வேலை: தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 4, 2022

காவல்துறை வேலை: தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம்

சென்னை, பிப்.4  காவல்துறை பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதன்படி, தமிழ் தகுதித் தேர்வில் குறைந்த பட்சம் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு கணக்கில் கொள்ள முடியும்.தமிழ்நாடு காவல்துறை தேர்வில் 2 தேர்வுகள் இருக்கும். முதல் தேர்வில் தமிழ் பாடத்தில் 80 வினாக்கள் கேட்கப்படும்(குறைந்த பட்சம் 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.) இரண்டாவது தேர்வு, வழக்கம் போல் நடக்கும். முதல் தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டும் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். இவர்களின் .எம்.ஆர்., விடைத்தாள் மட்டுமே திருத்தப்படும்.

அடுத்த கட்டமாக முக்கிய தேர்வானது 80 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேரம் 20 நிமிடம் தேர்வு நடக்கும். 15 மதிப்பெண் உடற் தகுதி தேர்வுக்கும், எஞ்சிய 5 மதிப்பெண் சிறப்பு மதிப்பெண்ணாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி தேர்வுகளில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment