சீன விமான நிலையத்தில் பயன்பாட்டிற்கு வந்தது
உலகில் பல மொழிகளைப்பேசும் மக்கள் ஒன்றாக கூடும் இடம் விமான நிலையம் தான். அதே நேரத்தில் விமான நிலைய நிர்வாகம் அனைத்து மொழிகளையும் பேசும் நபர்களை பணியில் நியமிப்பது மிகவும் கடினம். சீனாவில் தற்போது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்துவருகின்றன,
அப்போட்டிகளில் பங்கேற்க உலகில் சில நூறுபேர் மட்டுமே பேசும் மொழிகளைக் கொண்ட பகுதியில் இருந்தும் மக்கள் தொடர்பே பெரிதும் இல்லாத சைபீரிய பனிச்சதுப்பு நிலப் பகுதியில் இருந்தும் வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
இவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வது மிகவும் கடுமையான ஒன்றாக உள்ளது, மேலும் அவர்களது பயிற்சியாளர்கள் முழு நேரமும் அவர்களோடு இருப்பது இயலாத நிலையில் சீனா புதிய நவீன தொழில் நுட்பம் ஒன்றை உருவாக்கி உள்ளது, ஒருவரின் முகபாவத்தில் இருந்தே அவர்களது தேவைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மென்பொருள் சீன விமான நிலையத்தில் வைக்கப்
பட்டுள்ளது. இந்த மென்பொருள் வெற்றிகரமாக செயல்படுகிறது என்றும் இதனால் சீனாவில் உள்ள அனைத்து விமானநிலையங்களிலும் இதனைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் மொழி தெரியாத பயணிகளுக்கு பெரும்பயனளிப்பதாக உள்ளது. மேலும் குற்றச்செயலில் ஈடுபட நினைப்பவர்களையும் இந்த மென்பொருள் மூலமாக எளிதில் கண்டறிந்து மோசடி நபர்களையும் எளிதில் பிடித்துவிடலாம் என்று விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது.
‘பி.கே’ என்ற இந்தி திரைப்படம் ஒன்றில் சகமனிதர்களின் கைகளைப் பிடித்தே அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அதன் நாயகனாக நடித்த அமீர்கான் கூறுவார்.
இந்த நிலையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் தேவை என்ன வென்று உடனடியாக அறிந்துகொண்டு அந்த தகவலை சேவையாளர்களுக்கு அனுப்பி அவர்களுக்கு உதவிகள் கிடைப்பதை புதிய மென்பொருள் சாத்தியமாக்கி உள்ளது.
No comments:
Post a Comment