பொதுப்பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வு இணைய வழியில் தொடங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 3, 2022

பொதுப்பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வு இணைய வழியில் தொடங்கியது

சென்னை, பிப்.3 தமிழ் நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று (2.2.2022) முதல்முறையாக இணையம் மூலம் தொடங் கியது.

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாண வர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கியது. இதை யடுத்து சென்னை அண் ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன் னோக்கு மருத்துவமனை யில் முதல் நாளில் நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 73 பேரும், தொடர்ந்து 28-ஆம் தேதி நடந்த 2-ஆவது நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட் டுக்கான கலந்தாய்வில் 541 பேரும் மருத்துவ கல்லூரி களில் சேருவதற்கான ஆணையை பெற்றனர்.

இந்தநிலையில் கரோனா பரவல் காரண மாக தமிழ்நாட்டில் பொதுப்  பிரிவினருக்கான அரசு மருத்துவ கல்லூரி களின் 3,995 எம்.பி.பி.எஸ். இடங்கள், 157 பி.டி.எஸ். இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் மாநில அரசு ஒதுக்கீட்டுக் கான 1,390 எம்.பி.பி.எஸ். இடங்கள், 1,166 பி.டி.எஸ். இடங்களுக்கான கலந் தாய்வை முதல்முறையாக ஆன்லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பொதுப் பிரிவு கலந்தாய்வில் பங் கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த தர வரிசை பட்டியலில் இடம் பெற்றிருந்த 1 முதல் 10,456 பேரில் 9 ஆயிரத்து 894 பேர் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய் தனர்.

இந்த நிலையில் நேற்று (2.2.2022) பொதுப்பிரிவு கலந்தாய்வு   சுகாதாரத்துறை இணையதளங்களில் தொடங்கியது.

இதையடுத்து பதிவு செய்திருந்த மாணவ, மாணவிகள் ஆர்வமாக தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்தனர். இதில் முதல் நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் 1,429 பேர் மருத்துவ கல்லூரி களில் தங்களுக்கான இடங் களை தேர்வு செய்துள்ள னர். பொதுப்பிரிவினர் வரும் 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய் யலாம். தொடர்ந்து வரும் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை இடங்களை தேர்வு செய்த மாணவர் களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெறும்.

2-ஆம் கட்ட கலந்தாய்வு

இந்தநிலையில் வரும் 15-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங் களில் வெளியிடப்படும். 16-ஆம் தேதி கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை மாணவர்கள் சுகாதாரத் துறை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தொடர்ந்து வரும் 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி மதியம் 3 மணிக்குள் தேர்வு செய்யப்பட்ட கல்லூரி களில் மாணவர்கள் சேர்ந்துவிட வேண்டும்.

பொதுப்பிரிவின ருக்கான கலந்தாய்வு முடி வடைந்தவுடன், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக் கான கலந்தாய்வு நடை பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து காலியாக வுள்ள இடங்கள் 2-ஆம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளது என சுகாதாரத்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment