மனிதநேய ஜனநாயக கட்சி மாணவர் அமைப்பான மாணவர் இந்தியா சார்பில் 31.1.2022 மாலை 6 மணிக்கு சிதம்பரம் ரோட்டரி சங்க கட்டடத்தில் மாணவர் இந்தியா தலைவர் ஜாவித் சபர் தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் கனகராஜ், விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். காந்தியார் படுகொலை குறித்தும் அதை நடத்திய இந்து மகாசபா ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பற்றியும் மதச்சார்பற்ற நாட்டில் மத சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்புணர்ச்சி குறித்தும் பேசப்பட்டது. கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரனுக்கு நினைவு பரிசினை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வழங்கினார். நிகழ்வில் கழக தோழர்கள் திலீபன், தென்னவன், முரளிதரன், ஆனந்த பாரதி, வேலு ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் முஹம்மது சதக்கத்துல்லாஹ் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment