புதுடில்லி, பிப்.2 இந்தியாவில் பெகாசஸ் மென்பொருள் மூலம் தொலைப்பேசி ஒட்டுக் கேட்கப் பட்டது உண்மை என சைபர் நிபுணர்கள் கண்டுபிடித் துள்ளனர். உச்சநீதிமன்றம் அமைத்துள்ள விசாரணைக் குழுவிடம் சைபர் கிரைம் நிபு ணர்கள், ஆதாரங்களை அளித் துள்ளனர்.
பிரதமர் மோடி கடந்த 2017ஆம் ஆண்டு இஸ்ரேல் சென்றிருந்த போதே பெகாசஸ் மென் பொருளை இந்தியா வாங்கியுள்ளதை ‘நியூ யார்க் டைம்ஸ்’ பத்திரிகை அண்மை யில் அம்பலப்படுத்தியது. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் துள்ள மனு தாரர்கள், தங்களது தொலைப் பேசிகளை சைபர் ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தனர். அதனை ஆய்வு செய்த சைபர் நிபுணர்கள் அந்த தொலைப் பேசிகளில் பெகாசஸ் உளவு மென் பொருள் நுழைந்திருப் பதை உறுதி செய்துள்ளனர். இதனை அறிக்கை யாக உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள விசாரணைக் குழுவிடம் அளித் துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
இதற்கிடையே கடந்த ஆண்டு இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் வந்த போது, பெகாசஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மென்பொருள் எதை யும் உருவாக்கவில்லை என்றும் ஒன்றிய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்திருந்தார்.
அவரது அந்தத் தகவல் தவ றானது என்பது இப்போதைய சைபர் நிபுணர்களின் கண்டு பிடிப் பின் மூலம் உறுதியாகி உள்ளது. பெகாசஸ் மென் பொருள் மூலம் தொலைப்பேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் மக்களவையில் தவ றான தகவல் தந்த ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் பிரச் சினைக் கான தாக்கீதை காங் கிரசு கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரசு கட்சி உறுப்பினர்கள் அக்கட்சி களின் சார்பில் மக்களவைத் தலை வரிடம் கொடுத்துள்ளனர்.
எடிட்டர்ஸ் கில்டு மனு!
தொலைப்பேசிகளில் பெகாசஸ் உளவு மென் பொருள் ஊடுருவி இருப்பதை சைபர் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். எனவே, இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் எடிட்டர்ஸ் கில்டு மனு தாக்கல் செய்துள்ளது.
பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்த போதே பெகாசஸ் மென்பொருளை இந்தியா வாங்கி யுள்ளதை ‘நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அம்பலப் படுத்தியதை அடுத்து, இந்த விவகாரம் மீண்டும் பேருருவம் எடுத்துள்ளது. பெகாசஸ் விவ காரம் தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந் துள்ள மனுதாரர்கள், தங்களது தொலைப்பேசிகளை சைபர் ஆய்வுக்கு உட்படுத்தியிருந் தனர். அதனை ஆய்வு செய்த சைபர் நிபுணர்கள் அந்த தொலைப்பேசி களில் பெகா சஸ் உளவு மென் பொருள் நுழைந்திருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இதனை அறிக்கையாக உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள விசா ரணைக் குழுவிடம் அளித்துள் ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனுதாரர் களின் 7 அய்-ஃபோன் கள், 6 ஆன்ராய்டு தொலைப்பேசி களை இரண்டு வெவ்வேறு சைபர் நிபுணர்கள் குழுவினர் ஆய்வு செய்ததில், 2018ஆம் ஆண்டும், 2021 ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் இந்த தொலைப் பேசிகள் பெகாசஸ் மூலம் கண் காணிக்கப்பட்டுள்ளது தெரியவந் துள்ளது.
பெகாசஸ் வழக்கை விசா ரித்த உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந் தரன் தலைமையில் மூவர் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு விசாரணை அறிக் கையை தாக்கல் செய்தவுடன் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்திய பத்திரி கையாளர்கள் அமைப்பான எடிட்டர்ஸ் கில்டு உச்ச நீதிமன்ற குழுவிடம் புதிய கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளது.
அதில், பெகாசஸ் விவ காரத்தில் உலகின் மிக மதிப்பு வாய்ந்த ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை அம்பலப்படுத்தி யுள்ள செய்தியின் முக்கிய அம்சங்களையும் கருத்தில் எடுத்துக்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கேட் டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பெகாசஸ் மென்பொருளை வாங்கியது தொடர்பாக ஒன் றிய அரசின் நிதி, பாதுகாப்பு, உள்துறை, தகவல் தொழில் நுட்பத் துறை செயலாளர்கள் மற்றும் சி.ஏ.ஜி ஆகி யோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று எடிட்டர்ஸ் கில்டு கோரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment