வேலூர், பிப். 7- வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளை பொது பார்வையாளர்கள் 5.2.2022 அன்று ஆய்வு செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, குடி யாத்தம் மற்றும் பேரணாம் பட்டு நகராட்சிகள், ஒடுக் கத்தூர், பள்ளிகொண்டா, பென்னாத்தூர், திருவலம் என 4 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளன. அதேபோல், ராணிப் பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, மேல்விஷாரம் என 6 நகராட்சிகள், தக் கோலம், நெமிலி, பனப்பாக் கம், காவேரிப் பாக்கம், அம் மூர், விளாப்பாக்கம், திமிரி, கலவை என மொத்தம் 8 பேரூராட்சிகளில் தேர்தல் நடை பெறவுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர் தல் பணியில் எந்தவித முறை கேடும் இல்லாமல் இருக்க ஒவ்வொரு மாவட்டத்துக் கும் பொது பார்வை யாளர் கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட தேர் தல் பொது பார்வையாள ராக திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப் நியமிக்கப்பட்டுள் ளார். அவர் நேற்று பொறுப் பேற்றுக்கொண்ட நிலை யில், மாவட்டத் தில் செய் யப்பட்டுள்ள தேர்தல் முன் னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோ சனை செய்தார். தேர்தல் தொடர்பான புகார்களை பொது பார்வையாளரிடம் வேலூர் அண்ணா சாலை யில் உள்ள விருந்தினர் மாளிகையில் அறை எண் 2-இல் தினசரி மாலை 4 மணி முதல் 5 மணி வரை நேரில் சந்தித்து தெரி விக்கலாம். அவரது அலைபேசி எண் 94428-03941 என தெரிவிக் கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர் தல் பொது பார்வையாள ராக வளர்மதி நியமிக்கப் பட்டுள்ளார். அவர் நேற்று பொறுப்பேற்ற நிலையில், மாவட்ட ஆட்சியர் பாஸ் கர பாண்டியன் மற்றும் அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பான ஆலோச னைக் கூட்டம் நடத்தினார்.
No comments:
Post a Comment