'இலவசங்கள்' குறித்த தேர்தல் வாக்குறுதிகள்; ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

'இலவசங்கள்' குறித்த தேர்தல் வாக்குறுதிகள்; ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, பிப்.1 தேர்தலுக்கு முன் பொது நிதியில் இருந்து  இலவசங் களை வழங்குவதாக வாக்குறுதிய ளிக்கும் அல்லது பரப்பும் அரசியல் கட்சியின் தேர்தல் சின்னத்தை முடக்க அல்லது பதிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய பொது நல மனுவுக்கு பதிலளிக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் நீதிபதிகள் .எஸ்.போபண்ணா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, “இது ஒரு தீவிரமான பிரச்சினை மற்றும்   வழக்கமான பட்ஜெட்டைவிட நீதிச் சுமை அதிகமாக உள்ளது. இது ஒரு ஊழல் நடைமுறை இல்லை என்றாலும், அது ஒரு சீரற்ற தேர்தல் களத்தை உருவாக்குகிறது" என்று குறிப்பிட்டது.“நீங்கள் (மனுதாரர்) உங்கள் அணுகுமுறையில் (கட்சி களை குறிப்பிடுவதில்) தேர்ந்தெடுக் கப்பட்டவராக இருக்கிறீர்கள்" என்று நீதிபதி கோஹ்லி குறிப்பிட் டார். “பிரமாணப் பத்திரத்தில் ஏன் இருவரை மட்டுமே குறிப்பிட்டுள் ளீர்கள்?” என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பா... தலைவரும் வழக்குரைஞ ருமான அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "பஞ்சாப் தேர்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி 18 வயதுடைய ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,000 என்ற வாக்குறுதியை அளித்துள்ளது" என்று குறிப்பிட் டிருந்தார். மேலும் இது போன்ற பல உதாரணங்களும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அவை சிரோ மணி அகாலி தளம் (எஸ்..டி.) ஒவ்வொரு பெண் வாக்காளர்களின் வாக்குகளை கவர்ந்திழுக்க ரூ.2000 தருவதாக வாக்குறுதி அளித்துள் ளது. அதன்பிறகு, ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 8 எரிவாயு உருளைகள் வழங்கப்படும் என காங்கிரஸ் வாக் குறுதி அளித்தது. அது மட்டுமின்றி, கல்லூரிக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஸ்கூட்டி, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ.20,000, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ.15,000, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ.10,000 மற்றும் அய்ந் தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ.5,000 என வாக்குறுதிகளை அளித்துள்ளது.கடைசியாக,  12ஆம் வகுப்பு படிக்கும் ஒவ்வொரு பெண் ணுக்கும் திறன்பேசி,  ஒவ்வொரு பெண் ணுக்கும் இரு சக்கர வாகனம், பெண்களுக்கு இலவச பொதுப் போக்குவரத்து,   ஒரு குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வரை இலவச மருத் துவம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது என்று அந்த  மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம், உச்ச நீதிமன்றம், அரசியல் கட்சிகள், வேட்பாளர் களின் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களைத் தங்கள் இணைய தளங்களில் வெளியிடுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்  என்ற  அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மற்றொரு மனுவை விசாரிக் கப் பட்டியலிடுவது குறித்தும் பரிசீலிப்பதாகக் கூறியது.

No comments:

Post a Comment