சென்னை, பிப்.11 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.
ம.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அமைப்பில் இணைந்திட முன்வருமாறு 37 கட்சிகளின் தலைவர்களுக்கு, கடிதம் வாயிலாக அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த வரிசையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார். இதை ஏற்று, அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் ம.தி.மு.க. பிரதிநிதியாக, வழக்குரைஞர் ஆவடி அந்தரிதாஸ் செயல்படுவார்.
மேலும், முதலமைச்சரின் முயற்சிக்கு, வரவேற் பையும், வாழ்த்தையும் தெரிவித்து அவருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளங்களை கடந்து சென்றால் 6 மாத சிறை தண்டனை
தெற்கு ரயில்வே சென்னை ரயில் கோட்டம் எச்சரிக்கை
சென்னை, பிப்.11 தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று (10.1.2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ரயில் தண்டவாளங்களைக் கடந்து செல்வதைத் தடுக்கக் கோரியும், பாதுகாப்பான பய ணத்தை மேற்கொள்ளவும், தெற்கு ரயில்வே புதிய பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்குகிறது. பயணிகள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னு ரிமை அளிக்கிறது.
2019-2020ஆம் ஆண்டில் சென்னைகோட்டத்தில் ரயில்வே பாதுகாப்புபடையால் சட்டத்துக்கு புறம்பாக ரயில் தண்டவாளங் களைக் கடந்ததால் 2,422 பேர் கைது செய்யப்பட்டு, வழக்கு பதியப் பட்டுள்ளது. அவர்களிடமிருந்து ரூ.11.98 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதே குற்றத்துக்காக 2021ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2022 வரை 1,402 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.
ரயில்வே சட்டம், பிரிவு 147இன் படி மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்டது. ரயில் தண்டவாளங்களில் சட்டத் துக்கு புறம்பாக விபத்துகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக் கில் சென்னை கோட்டம் பலவித நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ரயில்வே நிலங்களில் ஆக்கிர மிப்புகளை அகற்றுதல், ஆபத்து ஏற்படக் கூடிய இடங்களில் எல்லை சுவர்களை எழுப்புதல், மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத் துதல், தேவையான இடங்களில் நடை மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஓடும் ரயிலில் ஏறுவது, இறங்குவது, சட்டத்துக்கு புறம்பாக ரயில் தண்டவாளங்களை கடப்பது ஆகியவற்றை மேற்கொண்டால், ரயில்வே சட்டம், பிரிவு 147-ன் படி 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேசிய சிலம்பு போட்டியில்
தமிழ்நாடு மாணவர்கள் சாதனை
திண்டுக்கல், பிப்.11 பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தாடிக்கொம்பை சேர்ந்த மாணவ - மாணவிகள் 24 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தாடிக்கொம்பு லட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் அவர்கள் எட்டு தங்கப் பதக்கம், ஏழு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒன்பது வெண்கலப் பதக்கம் என மொத்தம் 24 பதக்கங்கள் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளர் சந்திரசேகரன் முதல்வர் ரமேஷ், துணை முதல்வர் வித்யா மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் பாராட்டினர்.
No comments:
Post a Comment