மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறையில் அமைந் துள்ள திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் அவர்கள் வரும் 7.2.2022 அன்று பட்டினப்பிரவேசம் செல்ல இருப்பதாக அப்பகுதிகளில் விளம்பரப் படுத்தப்பட்டிருந்தது.
நவீன யுகத்திலும் இப்படி பட்டினப் பிரவேசம் என்ற பெயரில் மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்ச்சி நடைபெறக் கூடாது என அறிவுறுத்தி ஒருசில ஆண்டு களுக்கு முன்னர் தருமை ஆதீன மடத் திற்கு முன்பும் கடந்த வாரம் திருப்புகலூர் வேலாக்குறிச்சி மடத்திற்கு முன்பும் கழகத் தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதை அடுத்து அவர்கள் பட்டினப்பிரவேச நிகழ்வை கை விட்டனர்.
இந்நிலையில் தற்போது திருவாவடு துறை ஆதினகர்த்தர் அவர்களும் பட்டி னப்பிரவேசம் செல்ல இருப்பதை அறிந்த மாவட்ட கழகத் தோழர்கள் 3.2.2022 அன்று மாலை 4 மணியளவில் சந் நிதானத்தை நேரடியாக சந்தித்து பட்டினப்பிரவேசத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ஆ.ச.குண சேகரன், செயலாளர் கி.தளபதி ராஜ், குடந்தை மாவட்ட தலைவர் வழக் குரைஞர்கு. நிம்மதி, மயிலாடுதுறை மாவட்ட துணைத்தலைவர் கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி, குத்தாலம் ஒன்றிய தலைவர் சா.முருகையன், செயலாளர் கு.இளமாறன், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று ஆதினகர்த் தரிடம் நிலைமையை விளக்கிச் சொல்லி பட்டினப்பிரவேசத்தை கைவிடுமாறு வேண்டுகோள் கடிதம் கொடுத்தனர்.
No comments:
Post a Comment