பழைய முறையில் தயாராகும் ஒமைக்ரான் தடுப்பூசி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 3, 2022

பழைய முறையில் தயாராகும் ஒமைக்ரான் தடுப்பூசி

    பிரான்சைச் சேர்ந்த வால்னேவாவின் ஆராய்ச்சியாளர்கள், ஒரு புதிய முழு வைரஸ் கோவிட் தடுப்பூசியை பரிசோதித்து வருகின்றனர். அய்ரோப்பாவில் சில நாடுகளில் நடக்கும் இதன் சோதனைகள், மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளன. வால்னேவா வெளியிட்டுள்ள தகவல்படி, இந்தத் தடுப்பூசி, ஒமைக்ரான் வகை வைரஸ்களை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டவை.

இந்தத் தடுப்பூசி, முழுமையாக செயலிழக்கச் செய்த கோவிட்-19 வைரஸ்களைக் கொண்டது. இன்று போடப்படும் கோவிட் தடுப்பூசிகளில், சார்ஸ்-கோவ்- - 2 வைரசின் முள் நீட்சி போல உள்ள புரதங்களே உள்ளன. ஆனால், வால்னேவாவின் தடுப்பூசிகள், வெப்பம் அல்லது வேதிப் பொருள் 

வாயிலாக கொல்லப்பட்ட முழு கரோனா வைரஸ்களை கொண்டவை. இதே முறையில்தான், ஜோனாஸ் சால்க் போலியோ தடுப்பூசியை உருவாக்கினார். இந்த பழைய முறையில் தான் பல இன்புளூசென்சா தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.

எனவே, வால்னேவாவின் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தால், ஒரு நம்பகமான ஒமைக்ரான் தடுப்பூசி கிடைக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.


No comments:

Post a Comment