செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம், மதுராந்தகம் நகரம், செங்குந்தர் திருமண மண்டபத்தில் நினைவில் வாழும் சுயமரியாதைச் சுடரொளி மு.ஏழுமலை-சந்திரா ஆகியோரின் பேரனும் நகர செயலாளர் ஏ. செல்வம்-நிர்மலா ஆகியோரின் மகனுமான மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கவுதமன்-காயத்ரி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா சிறப்புடன் நடைபெற்றது. இவ்விழாவில் நகர தலைவர் மாம்பாக்கம் துரைராஜ் தலைமையில் மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம் உறுதிமொழி கூற மணமக்கள் உறுதிமொழி ஏற்று மாலை அணிவித்தனர். ம.கருணாநிதி தந்தை பெரியார் வாழ்க மணமக்கள் வாழ்க என முழங்கினார். மணவிழாவில் வந்திருந்த அனைவரும் முழங்க இனிதே நிறைவுற்றது.இவ்விழாவில் மாவட்ட செயலாளர் அ செம்பியன், செங்கல்பட்டு நகர தலைவர் க.தனசேகரன், கருங்குழி ராகுல் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அசோகன், ராமச்சந்திரன், குன்றத்தூர் கண்ணதாசன் மற்றும் குடும்பத்தினர் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment