நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை திரும்பப் பெறுக தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 4, 2022

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை திரும்பப் பெறுக தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு

புதுடில்லி, பிப்.4 நீட் விலக்கு மசோ தாவை திருப்பி அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங் கிரஸ், இந்திய கம்யூ. உள்ளிட்ட தமிழ்நாடு எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியிறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.

பின் அந்த மசோதா ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது ஆளுநர் ஆர்.என் ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழ் நாடு அரசிற்கே திருப்பி அனுப் பினார். அதற்கான காரணங்களை கடந்த பிப்.1 ஆம் தேதி தமிழ்நாடு அரசிற்கு விளக்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.  

நீட் தேர்வு அவசியம் என உச்சநீதிமன்றம் உத்தர விட்ட தையும் ஆளுநர் தனது அறிக் கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.  மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு சட்டப் பேரவைத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அறிவுறுத்தி உள்ளார்.

இந்தநிலையில்,   நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதற்கு மக்களவையில் தமிழ்நாடு நாடாளு மன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறு மாறு மக்களவையில் தமிழ்நாடு எம்.பிக்கள் முழுக்கமிட்டு வருகின் றனர்.

தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெறக்கோரி மக்களவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப் பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என தமிழ்நாடு எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

தொடர்ந்து   5 மாதங்கள் காலதாமதம் செய்து, நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் எனவும் நீட் விலக்கு மசோதாவை அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறினார்.

ஒரு மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என  மக்களவையில் ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதில் அளித்துள்ளார்.

இதனையடுத்து  தமிழ்நாடு ஆளுநரை திரும்பப்பெறக்கோரி மக்களவையில் இருந்து திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய் தனர். திமுகவை தொடர்ந்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்.கட்சி உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

No comments:

Post a Comment