ஒன்றிய பா.ஜ.க. அரசின் அலட்சியம்! தமிழ்நாடு மீனவர்கள் மீது தொடருகிறது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 2, 2022

ஒன்றிய பா.ஜ.க. அரசின் அலட்சியம்! தமிழ்நாடு மீனவர்கள் மீது தொடருகிறது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

 சென்னை, பிப்.2 மீனவர்களை தாக்கிவிட்டு அங்கிருந்த ஜி.பி.எஸ். கருவி மற்றும் வயர்லெஸ் கருவியை கடற்கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். 

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அன்பு, ஜெயபால், ஆறுமுகம், ஹரிகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீன் பிடிப்பதற்காக விசைப்படகில் நடுக்கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது ஃபைபர் படகு ஒன்று அவர்களது விசைப்படகை நோக்கி வந்துள்ளது.  அந்த ஃபைபர் படகில் இருந்தவர்கள் விசைப்படகின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் படகின் உள்ளே புகுந்த கொள்ளையர்கள், மீனவர்களை தாக்கிவிட்டு அங்கிருந்த ஜி.பி.எஸ். கருவி மற்றும் வயர்லெஸ் கருவியை எடுத்துச் சென்றுள்ளனர். 

அந்த கருவிகளின் மதிப்பு 75 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவருக்கு தலையில் காயமும் மற்றொரு மீனவருக்கு காலில் காயமும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மீனவர்கள் மீது நடுக்கடலில் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment