தஞ்சை, பிப். 7- தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழகம் நடத்திய அறிவுசார் கூட்டம் 04.02.2022 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
அனைவரையும் தஞ்சை மாவட்ட மாணவர் கழக தலை வர் இரா. கபிலன் வரவேற்றார் .மண்டல மாணவர் கழக செயலாளர் ச.சற்குணன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் இர. மகேந்தி ரன், மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர் ச. சிந்தனை அரசு, குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் ஏ. விடுதலை அரசி, பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் ஜா.இரா.நிலவன், கள்ளப்பெரம்பூர் மாண வர் கழக அமைப்பாளர் மா. பொன்னரசு, அன்னை வேளாங் கண்ணி கலைக் கல்லூரி மாண வர் கழக அமைப்பாளர் சே. கனிஷ்கர் ஆகியோர் முன்னி லையில் தஞ்சை மாவட்ட தலை வர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தொடக்க உரையாற்றினார்.
தொடர்ந்து பொதுச் செய லாளர் இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், மாநில பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் கோபு. பழனிவேல், மாவட்ட இணைச்செயலாளர் ச.சந்துரு, மாநகரச் செயலாளர் கரந்தை அ.டேவிட், மாநகர அமைப்பா ளர் செ. தமிழ்ச்செல்வன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு இரா. இராம லிங்கம், கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆட்டோ ஏகாம் பரம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஆசிரியர் பொன்னரசு, மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் இர. மணிகண்டன், மாநகர இளை ஞரணி செயலாளர் அ.பெரியார் செல்வன், ஏலாக்குறிச்சி சவுந் தர்ராஜன், பெரியார் மணி யம்மை அறிவியல் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர் ப.சுபாஷ், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் ஏ.வி.எம். குணசேகரன், களிமேடு ஹரி ஹரசுதன், மகளிர் அணி பொறுப்பாளர் செ. இந்திரா ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ. மதிவதனி "இனிவரும் உல கம்" தலைப்பில் மாணவர்களின் மத்தியில் எழுச்சியுரை ஆற்றி னார். தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட கழக பொறுப்பாளர் கள் சிந்தனை அரசி, ஆகாஷ், பொன்னரசு, நிலவன், சுபாஷ் ஆகியோருக்கு மாவட் டத்தலைவர் அமர்சிங் பயன் ஆடை அணிவித்து சிறப்பு செய்தார். மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் சே. ஆகாஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment