புதுடில்லி,
பிப்.6 மார்ச் 12ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான "நீட்" தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த
ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்வதற்கான நீட் தேர்வு மார்ச் 12ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்வை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி, மருத்துவம மாணவர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த
மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட்,
சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு
பட்டியலிடப்பட்டு இருந்தது. மனு விசாரணைக்கு வருவதற்கு சில மணி நேரங்களே இருந்தபோது, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒன்றிய அரசு தள்ளி வைத்தது. 6 முதல் 8 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரவின்பேரில், சுகாதார பணிகளுக்கான தலைமை இயக்குநர் இதற்கான ஆணையை பிறப்பித்தார். அதில், முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தேதியும், கடந்த ஆண்டு முதுநிலை நீட் தேறியவர்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு தேதியும் ஒரே நாளில் வருவதால் நீட் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment