அமெரிக்காவில் வள்ளுவர் தெரு தமிழர்களுக்கு இன்னொரு பெருமை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 6, 2022

அமெரிக்காவில் வள்ளுவர் தெரு தமிழர்களுக்கு இன்னொரு பெருமை!

வெர்ஜினியா, பிப். 6- உலகப் பொதுமறையாம் திருக் குறள் முதலில் தமிழில் எழுதப்பட்ட நூலாக இருந்தாலும் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிபெ யர்க்கப்பட்டு உள்ளது. திருக்குறளும், திருவள்ளு வரும் தமிழின் மிகப் பெரிய சொத்தாக பார்க் கப்படுகிறது.

    இதுமட்டுமல்லாமல், திருக்குறளுக்கு பன்னாட்டு அளவில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. திருக் குறள் குறித்து அய்ரோப் பிய நாடுகளில் ஆராய்ச் சிகளும் நடந்துள்ளன. இப்படி திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் உலகப் புகழ் உண்டு.

இந்த வரிசையில் திரு வள்ளுவரை கவுரவிக்கும் வகையில் அமெரிக்காவில் ஒரு தெருவிற்கு வள்ளுவர் தெரு என பெயர் சூட்டப் பட்டுள்ளது. அமெரிக்கா வில் வெர்ஜினியா மாநி லத்தில் உள்ள பேர்பேக்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தெருவிற்கு வள்ளுவர் தெரு என பெயர் சூட்டப் பட்டுள்ளது.

இதுகுறித்து வள்ளு வன் தமிழ் மய்யம், “அமெ ரிக்க மண்ணில் முதல் முறையாக வெர்ஜினியா மாநிலத்தில் பேர்பேக்ஸ் மாகாணத்தில் வள்ளுவர் தெருஉருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெர்ஜி னியா மாநில அவை உறுப்பினர் டெல் டான் ஹெல்மர் ட்விட்டரில், “தமிழ் சமூக உறுப்பினர் களை பிரதிநிதித்துவப் படுத்துவதில் பெருமை கொள்கிறேன். புகழ் பெற்ற கவிஞர் வள்ளுவர் பெயரில் அமெரிக்காவில் முதல்முறையாக வள்ளு வர் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளதுஎன்று  அவர் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment