புதுடில்லி,பிப்.28- ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. இராணுவத்தினர், ஒன்றிய, மாநில அரசின் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளித்து, இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும்.
இந்த பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் போது அந்த ஆண்டு மார்ச் 31 அல்லது ஏப்ரல் 1இல், ஒன்றாம் வகுப்பில் மாணவராக சேர்க்கை அளிப்பதற்கு 5 வயது நிறைந்திருக்க வேண்டும் என்ற விதி, பல ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில் வரும், 2022- 2023ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள், புதிய கல்விக் கொள்கையின்படி, 6 வயதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு 6 வயது முடிந்திருக்க வேண்டுமா அல்லது 5 வயது முடிந்து, 6 வய தில் இருக்க வேண்டுமா என்ற தெளிவாக குறிப்பிடப்பட வில்லை. ஏற்கெனவே, 5 வயது நிறைவ டைந்தால் போதும் என்ற நிலையில் தற்போது ஒன்றாம் வகுப்பில் சேர்க்க 6 வயது நிறைவடைய வேண்டும் என, திடீரென வயது வரம்பை உயர்த்துவ தால், மாண வர்களின் பெற் றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 56.18 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
அமைச்சர் தகவல்
சென்னை, பிப்.28 தமிழ் நாடு முழுவதும் நடைபெற்ற தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 56.18 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது என்று மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாமினை சென்னையிலுள்ள தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை குடியிருப்பு பகுதியில் நேற்று (27.2.2022) காலை 8.30 மணியளவில் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் மொத்தம் 43,051 மய்யங்களின் மூலம் 57.61 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று 56.18 லட்சம் குழந்தைகளுக்கு (97.53%) போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் அனைத்து துறைகளை சார்ந்த சுமார் 2 லட்சம் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் சுகாதார பணியாளர்கள் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு வீடு வீடாக சென்று விடுபட்ட அனைத்து குழந்தைகளையும் கண்டறிந்து போலியோ சொட்டு மருந்து வழங்குவார்கள். பயணவழி மய்யங்கள் 3 நாட்கள் செயல்படும். எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெற்றது.
அலங்காநல்லூர் மாணவர்கள் கின்னஸ் சாதனை
சென்னை, பிப்.28 சமீபத்தில் நடந்த ‘ஜம்பிங் ஜாக்ஸ்’ இணைய வழி கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில், சுமார் 400 பேர் கலந்துகொண்டனர். ஆனால் 170 பேர் மட்டுமே இந்த சாதனையை செய்து முடித்தார்கள். இதில் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 11 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் கலந்து கொண்டு சாதனை படைத்தனர். இந்த பள்ளியில் ஏற்கெனவே 50 மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இம்மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் காட்வின் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் பிராக்ரன்ஸ் லதா, உதவி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், சக்திகுமார், உடற்கல்வி இயக்குநர் ஞானசேகர், உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார் ஆகியோர் பாராட் டினர்.
அலைபேசி நிறுவனங்கள் உங்கள் புகாருக்கு செவிசாய்க்கவில்லையா? நீதிமன்றத்தை நாடலாம் உச்சநீதிமன்றம்
புதுடில்லி. பிப். 28 அலைபேசி சேவை குறைபாடு குறித்த புகார்களுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை நேரடியாக அணுகலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது
கடந்த 2014ஆம் ஆண்டு குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த அஜய் குமார் அகர்வால் தனியார் அலைபேசி நிறுவனத்துக்கு எதிராக மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அவர், ”நான் போஸ்ட் பெய்ட்’ முறையில்அலைபேசி சேவையைப் பயன்படுத்தி வந்தேன். கடந்த 2013ஆம் ஆண்டு நவ.8ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரையிலான கட்டணம் ரூ.24,609.51 செலுத்தும்படி கூறினார்கள். ஆனால் எனக்கு சராசரியாக மாதந்தோறும் ரூ.555 கட்டணம் மட்டுமே வந்தது. இருப்பினும், திடீரென அதிக கட்டணம் கேட்டது அதிர்ச்சியை எனக்கு ஏற்படுத்தியது. ஆகவே, அதிக கட்டணம் வசூலித்ததற்காக எனக்கு இழப்பீடாக ரூ.22,000-ம், அதற்கான வட்டியையும் வழங்க உத்தரவிட வேண்டும்,’ என்று கோரியிருந்தார்.
அந்த அலைபேசி நிறுவனம் ‘1885ஆம் ஆண்டு தொலைதொடர்பு சட்டம் ‘7 பி’ பிரிவின் படி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை,’ என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றத்தில் இதை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த் மற்றும் விக்ரம் நாத் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணை முடிவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், "கடந்த 1986ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவையில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதற்கு நிவா ரணம் பெற நுகர்வோர் நீதிமன்றத்தை நுகர்வோர்கள் நேரடியாக அணுகலாம்," எனத் தீர்ப்பளித்துள்ளனர்.
No comments:
Post a Comment