இந்தியாவிற்கே வழிகாட்டுகிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். தந்தை பெரியாருக்கு பின் அகில இந்திய அளவில் சமூகநீதிக் கொள்கைகளை நாடு முழுக்க எடுத்துச் சென்றவர் நமது ஆசிரியர் அவர்கள். அதில் ஆசிரியர் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆசிரியரால் தான் இன்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அகில இந்திய பணிகளில் 27%இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. நாட்டில் எங்கும் இல்லாத அளவுக்கு 69% இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் உள்ளது.
மக்களவையில் காங்கிரஸ் கட்சி மேனாள் தலைவர் ராகுல் காந்தி நானும் தமிழன் தான். தமிழ்நாட்டு மக்களை பாஜக ஒரு நாளும் ஆள முடியாது என்று உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். அது மட்டுமல்லாமல் மதவாத ஆர்.எஸ். எஸ். அமைப்பை கடுமையாக சாடி வருகிறார். இதற்கு முக்கிய காரணமே நமது ஆசிரியர் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவிலில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் Collected Works of Periyar EVR என்ற ஆங்கில புத்தகம் மற்றும் தந்தை பெரியாருடைய கருத்துக்கள் அடங்கிய ஆங்கில நூல்களை ராகுல் காந்தி அவர்களிடம் வழங்கியது தான் முக்கிய காரணம். அதனால் தான் இப்போது ராகுல் காந்தி பாஜக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விளாசுகிறார். நாட்டிற்கே வழிகாட்டுகிறார் ஆசிரியர் அவர்கள்.
- கோ.வெற்றிவேந்தன், மாவட்ட செயலாளர்,
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம்.
No comments:
Post a Comment