மீன்கள் எப்படி தகவல்களைப் பரிமாறுகின்றன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 10, 2022

மீன்கள் எப்படி தகவல்களைப் பரிமாறுகின்றன?

கார்ட்டூன் படங்களில் மீன்கள் பேசலாம். ஆனால், நீர் நிலைகளில் உள்ள அசல் மீன்களால் வாய் வழியே நிச்சயம் ஒலி எழுப்ப முடியாது என்றுதான் நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால், ஒரு புதிய ஆய்வினபடி, உலகிலுள்ள மூன்றில் இரண்டு பங்கு மீன்கள், ஒலி எழுப்புவதன் மூலம்தான், பிற மீன்களுடன் தொடர்புகொள்கின்றன.அமெரிக்காவிலுள்ள கார்னெல் பல்கலைக்ககழக விஞ்ஞானிகள், கூர் முனைத் துடுப்புகளைக் கொண்ட மீன்வகைகளை ஆராய்ந்தனர். இந்த வகைப்பாட்டின் கீழ், உலகிலுள்ள 99 சதவீத மீன்கள் வந்துவிடும்.

இவற்றுக்கு ஒலி எழுப்பும் தசைகள், காற்றை அடைக்கும் உறுப்பு, குறிப்பிட்ட வகை எலும்புகள் போன்றவை உள்ளனவா என்று கவனித்தனர்.ஆய்வின் முடிவில், 175 வகை மீன்கள் ஓலி மூலம் பிற மீன்களுக்கு தகவல்களைத் தருகின்றன என்பது தெரியவந்தது.

தங்கள் இருப்பிடம், அதன் எல்லைகள், உணவு இருக்குமிடம், துணையை வசீகரித்தல் போன்றவற்றை பிற மீன்களுடன் ஒலிகளை எழுப்பித்தான் பகிர்ந்துகொள்கின்றன என்பது உறுதியானது.

மீன்கள், நீரிலிருந்து எம்பி குதிப்பது, கரையின் மீது விழுந்து துள்ளிவிட்டு மீண்டும் நீருக்குள் போவது என்று பல அசாத்தியமான வேலைகளைச் செய்கின்றன. அவற்றால் ஒலி எழுப்ப முடியாமலா போகும்?

No comments:

Post a Comment