புதுடில்லி, பிப்.2 ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை என கூறி, அரசுக்கு எதிராக நேற்று நாடு முழுவதும் விவசாயிகள் துரோக தினம் கடைப்பிடித்தனர்.
டில்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கு மேலாக போராட் டம் நடத்தியதை தொடர்ந்து, வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றதுடன், விவசாயிகளின் பல்வேறு கோரிக் கைகளை நிறைவேற்றுவதாகவும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் விவசாயிகள் தங்கள் போராட் டத்தை திரும்ப பெற் றனர்.
ஆனால் ஒன்றிய அரசு அளித்த வாக்குறு திகளை நிறை வேற்றவில்லை என கூறி, அர சுக்கு எதிராக நேற்று நாடு முழுவதும் விவசாயிகள் துரோக தினம் கடைப்பிடித்தனர்.
இந்த நிலையில் தங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கிய வாக் குறுதிகளை நிறைவேற்றாவிட் டால் மீண்டும் போராட் டத்தை தொடங்குவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த போராட் டத்தை ஒருங் கிணைத்து நடத்தி வரும் சம் யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு இது தொடர்பாக வெளியிட் டுள்ள அறிக்கையில், பொது முடக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை இருந்தபோதிலும், விவசாயிகளின் அயராத முயற் சியால், நாட்டின் விவசாய உற் பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் விவசாயி களுடன் விளையா டுவது முழு நாட்டிற்கும் பேரழிவை ஏற்படுத் தும் என்று கூறப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப் பட்ட வாக்கு றுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றப் பட வில்லை என குற்றம் சாட்டியுள்ள அந்த அமைப்பு, விரைவாக அவற்றை நிறைவேற்றா விடில் போராட் டத்தை மீண்டும் தொடர்வோம் எனவும், தங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment