லாட்வியா, லிதுவேனியா உள்பட நான்கு நாடுகளின் விமானங்களுக்கு ரசியா தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 28, 2022

லாட்வியா, லிதுவேனியா உள்பட நான்கு நாடுகளின் விமானங்களுக்கு ரசியா தடை

மாஸ்கோ, பிப். 28- லாட்வியா, லிதுவேனியா, சுலோவே னியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களின் விமானங்கள், அந்நாடு களில் பதிவு செய்யப்பட்ட விமான நிறுவனங்களின் விமானங்கள் ஆகியவற் றுக்கு ரசியா தனது வான் பகுதியை மூடியுள்ளது.

மேற்கண்ட நாடுக ளின் சிவில் விமான போக் குவரத்து அதிகாரிகள் எதிர்மறையான முடிவு கள் எடுத்ததால், ரசியா வில் உள்ள நகரங்களுக்கு இந்த விமானங்களை இயக்க தடை விதித்துள்ளது. பயண வழியில் நிற்பதற்கும் தங்கள் வான்பகுதியை மேற்கண்ட நாட்டு விமா னங்கள் பயன்படுத்தக் கூடாது என்று ரசிய விமான போக்குவரத்து நிறுவனம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment