இன்றைய சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவு வரவேற்கத்தக்கது - அரசமைப்புச் சட்ட ரீதியானது! மகிழ்ச்சி - பாராட்டு - நன்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 5, 2022

இன்றைய சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவு வரவேற்கத்தக்கது - அரசமைப்புச் சட்ட ரீதியானது! மகிழ்ச்சி - பாராட்டு - நன்றி!

இன்றைய (5.2.2022) தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவு வரவேற்கத்தக்கது- அரசமைப்புச் சட்ட ரீதியானது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

மருத்துவப் படிப்புக்கான 'நீட்' தேர்விலிருந்து ஒன்றிய அரசிடம் விலக்கு பெறவேண்டி கடந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 5 மாதங்கள் வைத்திருந்த தமிழ்நாடு ஆளுநர் அதைத் திருப்பி அனுப்பியது அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணானது; காரணம், அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டிய சட்ட முன்வடிவே (மசோதா) தவிர, ஆளுநரே முடிவு எடுக்கவேண்டிய மசோதா அல்ல என்பதாலும், அதுபற்றி ஆளுநர் எழுப்பியுள்ள கேள்விகள்,  அவரது அரசியல் வரம்பிற்கு அப்பாற் பட்டது என்பதாலும், மறுபடியும் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி (விரைவில்) உறுப் பினர்கள் விவாதித்து, மீண்டும் அம்மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைக்க - இன்று (5.2.2022) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் கூடியுள்ள தமிழ்நாடு சட்ட மன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்ட ரீதியாகவே இதுதான் சரியான தீர்வு ஆகும்; அரசமைப்புச் சட்டத்தின் கூறு (Article 200 First Proviso படி) இதுதான் சரியான ஜனநாயக முறைப்படியான பரிகார நடவடிக்கை!

சட்டப்பேரவைத் தலைவர் சிறப்பு சட்டமன்ற கூட்டத் தேதியை முடிவு செய்து அறிவிப்பார்.

இந்த முடிவு சரியான முடிவு.

நமது மகிழ்ச்சியும், பாராட்டும், நன்றியும்!

முதலமைச்சரின் விரைந்த செயலாக்கமும், அதற்கு ஒத்துழைப்புத் தந்த முக்கிய அரசியல் கட்சித் தலை வர்களுக்கும் நமது மகிழ்ச்சியும், பாராட்டும், நன்றியும்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

5.2.2022

No comments:

Post a Comment