காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்ட நாளில் கோட்சே பெயரை சொல்லக்கூடாது என்று தடை செய்த கோவை காவல்துறையை கண்டித்தும், கோட்சே, ஆப்தே பெயரில் பாரத ரத்னா விருது வழங்கப் படுவதை கண்டித்தும், அகண்ட பாரதம் என்ற ஆர்எஸ்எஸின் முழக்கத்தை கண்டித்தும்,
தமிழ் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களின் அறிவிப்பை தந்தை பெரியார் திராவிடர் கழகம் வரவேற்கிறது.
பிப்ரவரி 5ஆம் தேதி திராவிடர் கழகம் நடத்திடும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் திராவிடர் கழக பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறேன். நன்றி
கு.ராமகிருட்டிணன்
பொதுச் செயலாளர்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
No comments:
Post a Comment