புதுடில்லி,
பிப்.6- சமூக நீதி காத்திட அனைத்திந்திய கூட்டமைப்பு அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பாராட்டுக் களை தெரிவித்துள்ளார்.
இது
தொடர்பாக அவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு
எழுதியுள்ள கடிதம் வருமாறு:
அன்பார்ந்த
மு.க.ஸ்டாலின், 2022 பிப்ரவரி
2 ஆம் நாளிட்ட தங்கள் கடிதம் கிடைத்தது. மிக்க நன்றி. தேசிய அளவில் கூட்டாட்சித் தத்துவம், சமூக நீதி ஆகியவற்றின்
கொள்கைகளை எய்துவதற்காக செயல்படும் அனைத்துத் தலைவர்கள், குடிமைச் சமூக அமைப்பு களின் உறுப்பினர்கள் மற்றும் அது போன்று இயங்கிடும் தனிநபர்கள், அமைப்பு கள் அனைத்தையும் அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு என்னும் ஒரே மேடையில் கொண்டுவருவதற்காகத் தாங்கள் மேற்கொண்டி ருக்கும் முயற்சிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனினும்,
இப்பிரச்சினைகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பாக கலந்தாலோசனைகள் தேவைப்படுகின்றன. சமூக நீதிக்கான
போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற் காகவும், நம் அரசமைப்புச்சட்டம் உத்தரவாதம் அளித் துள்ளது போல் அனைவருக்கும், அவர்களின் “ஜாதி,
மதம் அல்லது பாலின வித்தி யாசங்கள் எதுவு மின்றி” சமவாய்ப்புகளை உத்தரவாதப்படுத்திடவும், சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் தாங்கள் குறிப்பிட்டுள்ள குறிக்கோள் களை எய்தக்கூடிய விதத்தில் கலந்தாலோசனைகளை மேற்கொள்வீர்கள் என நான் நிச்சயமாக
நம்புகிறேன்.
கட்டட கழிவுகளை அகற்றும் பணி ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்க வேண்டும்
பசுமைத்
தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை,
பிப்.6 கால்வாயில் கட்டட கழிவுகளை அகற்றும் செலவை ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில்
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த
வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் தியாகராயர் நகர் பகுதிகளில் வடிகால்கள் மூலமாக தண்ணீரை வெளியேற்றிய போதிலும், அந்த வடிகால்கள் வாயிலாக வெள்ளநீர் செல்லாமல் எதிர்வாங்கியது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் பல நாள்களாக தண்ணீர்
தேங்கி இருந்தது.
இது
தொடர்பாக சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு 4.2.2022 அன்று விசாரணைக்கு வந்த போது, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வடியாதது தொடர்பாக மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு
மாநகராட்சி தரப்பில், தியாகராயர் நகர், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, மேற்கு மாம்பலம், சி.அய்.டி.
நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறக்கூடிய தண்ணீர் மாம்பலம் கால்வாய் வழியாகத் தான் வெளியேற வேண்டும். இந்த கால்வாயை சீரமைக்க கடந்த ஆட்சியின் போது 6 ஒப்பந்ததாரர்களிடம் ஒப்பந்தம் ஒப்படைக்கப்பட்ட போதும் அவர்கள் கால்வாய் சீரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.
மேலும்
சீரமைப்புப் பணிகளின் போது சேர்ந்த கட்டட கழிவுகளை ஆங்காங்கே கொட்டிவிட்டுச் சென்றதால், கால்வாய் நீர்வழித்ததடம் அடைத்துக் கொண்டதாகவும், இதன் காரணமாக தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் எதிர்வாங்கியது கண்டறியப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை
பதிவு செய்து கொண்ட பசுமை தீர்ப்பாயம், கட்டட கழிவுகளை அகற்றுவதற்கான செலவை ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த
வழக்கின் விசாரணையை பிப்ரவரி 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
டி.என்.பி.எஸ்.சி
தகவல்: குரூப் 2, குரூப் 2 ஏ- தேர்வுக்கான தேதி
இந்த
மாதம் வெளியீடு
சென்னை,
பிப்.6 டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2 ஏ தேர்வுகளுக்கான தேதி
இந்த மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் கா.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
விழுப்புரத்தில்
செய்தியாளர்களுக்குப்
பேட்டி அளித்த டி.என்.பி.எஸ்.சி தலைவர் கா.பாலச்சந்திரன் மேலும் கூறுகையில், குரூப்
4 தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும். அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாள்களில் தேர்வு நடத்தப்படும். இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்வுகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அனைத்து
தேர்வுகளும் காலை 9.30 மணிக்குத் தொடங்கி 12.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 32 வகையான தேர்வுகளை நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment