கோவை மாநகர காவல்துறைக்கு இரா.முத்தரசன் கண்டனம்
சென்னை,பிப்.1- இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயலாளர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
தேச தந்தை அண்ணல் காந்தி 1948 ஜனவரி 30ஆம் தேதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். உலகை உலுக்கிய இந்தப் படு கொலை நிகழ்வின் முதல் குற்ற வாளி நாதுராம் கோட்சே என் பதையும், இந்து மதவெறி கொண்டு அழித்தொழிக்கப்பட்டார் என்பதையும் நாடும், மக்களும் நன்கறிவர். இந்த நிலையில் காந்தியார் மதவெறிக்கு பலியான 73ஆம் ஆண்டு நினைவு தினம் சமூக நல்லிணக்க உறுதி ஏற்பு நாளாக கடைப்பிடிக்காப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் நடந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உறுதி மொழி வாசித்துக் கொண் டிருந்த போது கோவை மாநகரக் காவல்துறை அதிகாரிகள் நேரடி யாக தலையிட்டு, உறுதிமொழி வாசிப்பை இடைமறித்து குறுக்கீடு செய்து, “நாதுராம் கோட்சே” என்ற பெயரை உச்சரிக்கக் கூடாது. அவரை மதவெறியர், கொலைக் குற்றவாளி என்று கூறக்கூடாது என்று தடுத்துள்ளனர். கோவை மாநகரக் காவல்துறையின் நட வடிக்கை அதிர்ச்சியளிக்கிறது. காந்தியாரை மதவெறி பிடித்து, படுகொலை செய்த குற்றவாளிக்கு, நீதிமன்றம் தூக்குதண்டனை வழங்கி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த உண்மையை சொல்லவும் காவல்துறை அனுமதிக்காது எனில் அரசமைப்பு சட்டம் வழங் கியுள்ள அடிப்படை உரிமை களை கோவை மாநகரக் காவல் துறை பலவந்தமாக பறிக்கும் செயலாகும். கோவை மாநகரக் காவல்துறையின் சட்ட அத்து மீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துமீறிய காவல்துறை அதி காரிகள்மீது உரிய சட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
No comments:
Post a Comment