வாக்குச் சாவடி விவரத்தை இணையதளத்தில் அறியலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 9, 2022

வாக்குச் சாவடி விவரத்தை இணையதளத்தில் அறியலாம்

சென்னை , பிப். 9  பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடி விவரங்களை இணையதள இணைப் பின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 200 வார்டு உறுப்பினர் களுக்கான தேர்தல் பிப். 19-ஆம் தேதி நடை பெறவுள்ளது. ஆண் வாக்காளர் களுக்காக 255 வாக்குச் சாவடிகள், பெண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்காக 5,284 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5794 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன.

இந்த வாக்குச் சாவடி விவரங் களை  http://election.chennaicorporation.gov.in   .என்ற நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளுக்கான தேர் தல்-2022 இணையதளத்தில்   Know your Zone and Division   என்ற இணைப் பில் சென்று மண்டலங்கள் மற்றும் வார்டுகளின் அமைவிடங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும்,    Know your Polling Station   என்ற இணையதள இணைப்பில் மாநகராட்சியின் 200 வார்டுகளில் உள்ள வாக்குச் சாவடிகளின் விவ ரங்களை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment