வேட்பாளர் பட்டியல் வெளியானதால் மணிப்பூரில் பா.ஜ.க. உள்கட்சி மோதல் குத்து-வெட்டு, மோடி உருவப்பொம்மை எரிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

வேட்பாளர் பட்டியல் வெளியானதால் மணிப்பூரில் பா.ஜ.க. உள்கட்சி மோதல் குத்து-வெட்டு, மோடி உருவப்பொம்மை எரிப்பு!

புதுதில்லி, பிப். 1- மணிப்பூர் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானதை யடுத்து அந்தக் கட்சியில்குத்து- வெட்டுஏற்பட்டுள்ளது

காங்கிரசில் இருந்தும் என்பிபியில் இருந்தும் வந்த கட்சித் தாவிகள் 10 பேருக்கு இடங்கள் வழங்கப்பட்டதால் கோபமடைந்த பாஜக தொண்டர்கள், பல இடங்களில் தங்கள் அலுவலகங்க ளைத் தாக்கி சூறையாடியதுடன், பிர தமர் நரேந்திர மோடி, முதல்வர் பீரேன் சிங் ஆகியோரின் உருவப் பொம்மை களையும் எரித்துள்ளனர். பாஜக அலு வலகங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டாலும், அதற்கு பலனில்லாத நிலை ஏற் பட்டுள்ளது. மணிப்பூரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும், கட்சித் தலைமையின் முடிவை எதிர்த்து, முக்கியத் தலைவர்கள் பலரும் பாஜக-விலிருந்து தங்களின் பதவிகளி லிருந்து வெளியேறத் துவங்கியுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பீரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு  கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், 21 இடங் களில் மட்டுமே வென்றிருந்த பாஜக, சிறிய கட்சிகளை சேர்த்துக் கொண்டு அதிகாரத்திற்கு வந்தது. அதேபோல இந்தமுறையும் ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என பாஜக தீவிரமாக உள்ளது. இதற் காக காங்கிரஸ் மற்றும் என்பிபி கட்சியைச் சேர்ந்த முக்கியமான தலைவர்கள் 10 பேரை அண்மையில் தன்பக்கம் இழுத்தது.

தற்போது வெளியிட்டுள்ள 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட் டியலில் கோவிந்தாஸ் கோந்தவுஜம் உள்ளிட்ட முன்னாள் காங்கிரஸ் தலை வர்கள் 10 பேருக்கு சீட்டும் வழங்கியது. இது பாஜகவுக்கு எதிராகவே திரும்பி யுள்ளது.  மணிப்பூர் தலைநகர் இம் பாலில் உள்ள பாஜக தலைமை அலு வலகத்திற்கு காவல்துறைபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment