திருவாரூர், பிப். 28- திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் சுயமரியாதைச் சுட ரொளி இராமமூர்த்தி-அமுதா ஆகியோ ரின் மகன் அருண்செல்வமுருகனுக்கும், திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் கண்ணன்-ஜெயந்தி ஆகியோரின் மகள் கனிமொழிக்கும் 23 2 2022 புதன் கிழமை காலை 10 மணி அளவில் சோழங்கநல்லூர் சிறீலட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் வாழ்க்கை ஒப்பந்த விழா நடைபெற்றது.
ஒன்றிய கழக செயலாளர் சாம்ப சிவம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் முன்னாள் அமைச்சர், திராவிட முன்னேற்ற கழக மாநில விவ சாய தொழிலாளர் அணி செயலாளர், ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் மதிவாணன் முன்னிலை ஏற்று வாழ்த்துரை வழங்கினார்.
திராவிடர் கழகப் பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமார் மணமக்களை உறுதிமொழி ஏற்கச் செய்து வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார் திராவிடர் கழக கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதி ரடி அன்பழகன் திருவாரூர் மாவட்ட கழகத் தலைவர் வீ.மோகன் திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி ஆசிரியர் முனியாண்டி, நாகை மாவட்ட செயலாளர் ஜெ.பு பேஸ்குப்தா, மாவட்ட துணைச் செயலாளர் வீரய்யன் மாவட்ட ஆலோசகர் கோவிந்தசாமி திருவாரூர் ஒன்றிய தலைவர் ராஜேந் திரன் திருவாரூர் ஒன்றிய அமைப்பாளர் கவுதமன் ஒடாச்சேரி ஊராட்சி ஊராட்சி மன்ற தலைவர் நெல்சன்மண்டேலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் விழாவில் மாவட்ட மகளிரணி தலைவர் மகேஸ்வரி மாவட்ட மகளிரணி செயலா ளர் சரசு நன்னிலம் ஒன்றிய தலைவர் கரிகாலன் உ மாவட்ட விவசாய தொழி லாளர் அணி செயலாளர் ரெத்தினசாமி திருவாரூர் நகர கழகத் தலைவர் ராம லிங்கம் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும் உறவினர்களும் நண்பர் களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சோழங்கநல்லூர் இளைஞரணி தோழர் கோபிநாத் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment