நாடாளுமன்றத்தில் தர்மபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் உரை
புதுடில்லி பிப். 8- இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் சமூக பொருளாதார தளங்களில் வெற்றியைக் கண்ட திராவிட மாடலை பின்பற்றினால் சரியாக இருக்கும் என்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என். வி. செந்தில்குமார் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்து வர் டி.என்.வி.செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினார்.
அவர் உரையில் குறிப்பிட்டதா வது,
குடியரசுத் தலைவர் உரையில் "கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்ற திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிற எளிமை யாக சொல்ல வேண்டும் என்றால் அதனை கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது.
தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் நம் இந்திய அரச மைப்பு சட்டத்தின் உயரிய லட்சி யங்களை கடைப்பிடிக்கின்றனவா? மேலும் டாக்டர் அம்பேத்கர் குறிப் பிட்டுள்ளபடி எனது லட்சியம் சுதந் திரம், சமத்துவம் மற்றும் சகோதரத் துவத்தை அடிப்படையாக கொண்ட சமூகம் ஜனநாயகம் என்பது வெறும் அரசாங்க வடிவம் அல்ல. அது அடிப்படையில் சக மனிதனி டம் மரியாதை மற்றும் மரியாதைக் குரிய அணுகுமுறையை உருவாக்குவ தாகும்.
ஜிஎஸ்டி வரி வசூலின் இழப்பீடு கள் மாநிலங்களுக்கு இன்னும் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தற்போதைய நிதி ஆண்டு உள்பட தமிழ்நாட்டிற்கு 16 ஆயி ரத்து 725 கோடி ஜிஎஸ்டி ரூபாய் நிலுவையில் உள்ளது. அதை எப் போது வழங்கப் போகிறீர்கள். குடி யரசுத் தலைவர் உரையில் கோக்ளி யர் உள்ளமைப்பு அறுவை சிகிச்சை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
ஆனால் இந்த அறுவை சிகிச்சை மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி இந்தியாவில் முதன் முதலாக தொலைநோக்கு பார்வை கொண்ட முத்தமிழறிஞர் கலைஞரால் 2010ஆம் ஆண்டு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.
திமுகவின் சமூக பொருளாதார தளத்தில் தொலைநோக்குப் பார் வையைக் காட்டுகிறது. குடியரசு தலைவர் உரையில் தமிழகத்தை சேர்ந்த வ.உ.சிதம்பரனார் அவர்க ளைப் பற்றிய குறிப்பு காணப் பட்டது. ஆனால் குடியரசு தின அணிவகுப்பில் எங்கள் மாநிலத்தில் அலங்கார ஊர்தியில் வைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் கப்ப லோட்டிய தமிழன் வ.உ.சிதம்ப ரனார், வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் நிராகரிக்கப்பட்டுள்ள னர்.
இவர்களுக்கு பதிலாக அணில் மனித தலையுடன் கூடிய மாட்டின் உடல், காவி உடை அணிந்த மனிதர் கள் ஆகியவைத்தான் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் அனுமதிக்கப் பட்டன.
இவை பார்போற்றும் தமிழர் களின் பெருமையை புண்படுத்தியது. பெருமையை நிலைநாட்ட எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அலங்கார ஊர்த்தியை மாநில அணிவகுப்பில் காட்சிப் படுத்த ஏற்பாடு செய்தது மட்டு மல்லாமல் அந்த அலங்கார ஊர்தி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்க ளுக்கு அனுப்பப்பட்டது.
இவற்றை மக்கள் பெருமிதத் தோடு வரவேற்றனர். அய்ந்து நிமிட நிகழ்வை ஒரு மாத நிகழ்வாக நீங்கள் மாற்றினீர்கள்.
இந்திய ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்று நீதித்துறை ஆனால் சமீபத்திய காலங்களில் சில இடங்களில் சில நீதிபதிகள் அரசி யல் சாயத்துடன் செயல்படுகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு இரண்டு நீதிபதிகள் ஜாதி சார்ந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஒரு குறிப்பிட்ட நீதிபதி ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பிணை வழக்குகளை சிபிஅய்க்கு மாற்றுவதற்கு அணுகுகிறது. நீதிபதி கள் சட்டம் மேற்கோள்கள் மற்றும் அரசமைப்பின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவார்கள். மாறாக நீதிபதிகள் இந்தி படங்கள் மற்றும் தமிழ் திரைப்படங்களின் குறிப்பு களை மேற்கோள்காட்டி தீர்ப்பு வழங்குகிறார்கள். இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்து கிறது.
சட்டக்கல்லூரி மாணவர்கள் நீதிமன்றம் மற்றும் நூலகங்கள் தீர்ப்புகளை தேடிச்சென்று சட்டம் படிக்கும் பொழுது திரையரங்குகள் மற்றும் ஓ.டி.டி. தளங்களுக்குச் சென்று சட்டம் கற்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் விரும்பு கிறதா?
தேசிய கல்விக் கொள்கையில் இந்த அரசாங்கத்தின் முக்கிய இலக் கில் ஒன்று உயர்கல்வியில் 2035ஆம் ஆண்டு மொத்த பதிவு விகிதத்தை 50 சதவீதம் உயர்த்துவது. ஆனால் தமிழ்நாடு தற்போது 50 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆனால், தேசிய சராசரி வெறும் 24.6 சதவீதம்தான். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பல அமெரிக்க மாகாணங்களை விட தமிழ்நாடு மொத்த பதிவு விகிதத்தில் முன்னேறி உள்ளது. இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் தமிழகத்தில் சமூக பொருளாதார தளங்களில் வெற்றியைக் கண்ட திராவிட மாடலை பின்பற்றினால் சரியாக இருக்கும்.
அதை விட்டுவிட்டு 20 வருடம் முன்னே செல்லும் ஒரு முன்னோடி மாநிலத்தின்மீது இந்த மாதிரியான கல்விக் கொள்கையை திணிப்பது - உங்களுக்கு வேண்டுமென்றால் cow belt பிராந்தியத்தில் செயல்படுத்திக் கொள்ளுங்கள். எங்கள் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிப்படையில் இணக்கமான நபர். அவர் வார்த்தைகளை குறைத் துக்கொண்டு செயலில் அதிகம் ஈடுபடுபவர்.
அவர் தலைமையில் அரசியல் சட்டப் போராட்டம் செய்து மருத் துவம் மற்றும் பல்மருத்துவ படிப்பு களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கு அகில இந்திய கோட் டாவை பெற்றுத்தந்தார்.
சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத் திந்திய சமூகநீதி கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார்.
சமீபத்திய நிகழ்வான அய்.ஏ.எஸ் அலுவலர்கள் விதிமுறைகள் திருத் தம் கொண்டு வந்தது. அய்.ஏ.எஸ். அலுவலர்களின் விருப்பம் மற்றும் மாநில அரசுகளின் ஒப்புதல் இல் லாமல் ஒன்றிய அரசு பணிக்கு அலுவலர்களை மாற்றுவது உள் ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றதை எங்கள் மாநில சுயாட்சி அடிப் படையில் எதிர்க்கிறோம்.
எங்கள் முதலமைச்சர் தமிழ கத்தை இந்தியாவில் இருக்கும் மாநி லங்களுடுன் ஒப்பிட்டு போட்டி போடாமல் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு அனைத்து தளங்களிலும் முன்னேற்ற வேண்டும் என்று திட்டமிடுகிறார்
இவ்வாறு தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் டி.என்.வி. செந்தில் குமார் தனது உரையில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment